Breaking News

குஷியோ குஷி…!! தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 18-ம் தேதி முதல் கோடை விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

 


தமிழ்நாட்டில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்த நிலையில் தற்போது 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 9-ம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையிலும் 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 8-ம் தேதி முதல் 21ஆம் தேதி வரையிலும் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்வுகள் முடிவடைந்த பிறகு ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வினை முன்கூட்டியே நடத்த தொடக்க கல்வித்துறை முடிவு செய்து அதற்கான அறிவிப்பை  வெளியிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 7-ம் தேதி முதல் 17ஆம் தேதி வரை முழு ஆண்டு தேர்வு நடைபெற உள்ளது. மேலும் இதனால் ஏப்ரல் 18ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது.

No comments