எந்தெந்த மாவட்டஙகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை?
தமிழ்நாட்டில் தொடர் கனமழை காரணமாக 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை மையம்.
வடகிழக்கு பருவமழை:
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஏற்கனவே அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. இதையடுத்து செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர்.
இதையும் படிக்க: நள்ளிரவில் கொட்டி தீர்த்த கன மழை..! வாக்கி டாக்கியுடன் களமிறங்கிய மேயர் ப்ரியா..!
கொட்டி தீர்த்த மழை:
இந்த நிலையில், நேற்று விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இரவில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
ஆரஞ்சு நிற எச்சரிக்கை:
இதையடுத்து திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
No comments