தமிழ்நாட்டை நெருங்கிய புயல்.. இந்த 2 விஷயம்தான் புதிராகவே இருக்கிறது.. ஆட்டம் காட்டும் "மாண்டஸ்"!
வங்கக்கடலில் உருவாகி இருக்கும் மாண்டஸ் தொடர்பாக இரண்டு கேள்விகள் எழுந்துள்ளன. இந்த புயலில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக, வானிலை அறிக்கைகளும் மாற்றப்பட்டு உள்ளன.
தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று உள்ளது. இந்த புயலுக்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த புயல் தமிழ்நாட்டை நோக்கி வந்துகொண்டு இருக்கிறது.
இந்த புயல் காரணமாக இன்று தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும் புதுக்கோட்டை, காரைக்கால் பகுதிகளில் மிகவும் பலத்த மழை பெய்யலாம் என வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், புதுச்சேரியில் இன்று பலத்த மழை கொட்டி தீர்க்கலாம் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
முதலில் இருந்தே இந்த புயல் கொஞ்சம் வானிலை வல்லுனர்களை குழப்பத்தான் செய்தது. அதன்படி சீன கடல் பகுதியில் இருந்து அந்தமான் பக்கம் இந்த தாழ்வு பகுதி வருவதே சந்தேகமாக இருந்தது. இந்த தாழ்வு பகுதி முழுமையாக அந்தமான் பகுதிக்கு வந்து அதன்பின் வலிமை அடையுமா என்ற கேள்வி இருந்தது. கடைசியில் 3 நாட்களுக்கு முன் இந்த தாழ்வு பகுதி ஒருவழியாக அந்தமான் கடல் பகுதிக்கு வந்து பின்னர் தாழ்வு மண்டலமாக மாறியது. அதன்பின் இது புயலாக மாறுவது உறுதியானது.
வானிலை
No comments