Breaking News

குடும்பத்திற்கு ஒரே மகளா?. மாதம் ரூ.35,000 வழங்கும் மத்திய அரசின் திட்டம்.. எப்படி பயன்பெறுவது.???

 

ரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டுமே இருந்தால் மத்திய அரசு பெண் குழந்தைக்கு சாவித்திரிபாய் ஜோதிராவ் புலே பெல்லோஷிப் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் ஐந்து ஆண்டுகளுக்கு பெண் குழந்தைகளுக்கு இலவசமாக மத்திய அரசு பணம் வழங்கும். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கும் குடும்பத்தில் ஆண் பிள்ளைகள் இருக்கக் கூடாது. ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் அவர்களில் ஒருவர் மட்டுமே பயனடைய முடியும்.

இதற்கு ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பித்து பெற்றோர்கள் தங்களுக்கு ஒரே ஒரு பெண் குழந்தை மட்டுமே என்பதை 100 ரூபாய் முத்திரைத்தாளின் மூலமாக உறுதிமொழி பத்திரமாக சமர்ப்பிக்க வேண்டும். பெண் குழந்தையின் பெயரில் வங்கி கணக்கு, ஆதார் மற்றும் மொபைல் எண் இருக்க வேண்டும். இதன் மூலமாக ஜூனியர் ரிசர்ச் பெல்லோ 2 ஆண்டுகளுக்கு மாதம் தோறும் 31 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெற முடியும். சீனியர் ஆராய்ச்சி பெல்லோக்களுக்கு மாதம் 35 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

சிறப்பு தகுதியாக இந்த திட்டத்தில் பயனடைய விரும்பும் பெண் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் பிஎச்டி பயில வேண்டும். இந்த திட்டத்தில் பயன்பெறுவதற்கு https://www.ugc.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று திட்டத்திற்கு பதிவு செய்து அங்கு கேட்கப்படும் விவரங்களை உள்ளிட்டு புகைப்படம் மற்றும் கையொப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதில் விவரங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பிறகு அனைத்து தகுதிகளும் பூர்த்தி செய்யப்பட்டால் அந்த பெண் இந்த உதவி தொகை திட்டத்தில் பயன்பெற முடியும்.

No comments