Breaking News

CL LEAVE RULES - அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுப்பதற்கான விதிகள் !!

 


 CL LEAVE 𝙍𝙐𝙇𝙀𝙎

1. ஒரு ஆண்டிற்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பு: வழங்கப்படும். ஒரே நேரத்தில் பத்து நாட்கள் தனியாகவோ , அரசு விடுமுறை அல்லது ஈடுசெய்யும் விடுப்பு முதலியவற்றுடன் சேர்த்தோ அனுபவிக் கலாம்.

2. அவ்வாறு நாட்கள் தொடர்ந்து அனுபவிக் கும்போது, இயற்கை சீற்றம், தேசிய தலை வர் மரணம், பந்த், பண்டிகை, திடீர் விடுமு றை காரணமாக 11 வது நாள் அரசு விமுறை என அறிவிக்கப்பட்டால் ஊழியர் 10க்கு மேற் பட்ட அந்த நாளையும் விடுப்பாக அனுபவிக்க லாம். (அ.நி.எண். 309 ப.ம.நி.சி.(அவி.11) நாள் 16.08.93)

3. தற்செயல் விடுப்பை ஈட்டிய விடுப்பு மற்றும் பிற முறையான விடுப்புடன் இணைத்து அனுபவிக்க இயலா து.

4. தற்செயல் விடுப்பு விண்ணப்பத்தில் அதற் கான காரணத்தை குறிப்பிட வேண்டியதில் லை. (அ.க.எண். 1410 ப.ம.நி.சீ துறை 2.12.77 ).

5. தற்காலிக பணியாளர் மற்றும் தகுதிகாண்பருவத்தினருக்கு 3 மாதங்களுக்கு 2 நாட்கள் என்ற அளவில் இவ்வுடுப்பு வழங்கப்படும். (அவி. இணைப்பு VI )

6. தகுதிகாண்பருவம் முடித்தவர்- நிரந்தர பணியாளர் ஆண்டு துவக் கத்திலேயே பணி நிறைவு பெரும் பணியாளருக்கு 12 நாட்கள் தற் செயல் விடுப்பை ஆண்டு துவக்கத்தி லேயே வழங்கலாம். (அரசு கடித எண். 61559 /82 -4 ப.ம.சீ துறை நாள். 17.1.83)

7. குறைந்தபட்சம் அரைநாள் சிறுவிடுப்பு அனுமதிக்கப்படும்.

8. அவசர காரணங்களுகளுக்காக முதலில் விடுப்பு எடுத்துவிட்டு பின்னர் இதற்கான விண் ணப்பத்தினை அளிக்கலாம். ( அரசுக் கடிதம் 61559 /82 -4 ப.ம.சீ துறை நாள். 17.1.83)

No comments