உங்க செல்போனில் கீழே இருக்கும் இந்த சிறிய துளை எதுக்குன்னு தெரியுமா?. இதோ பலரும் அறியாத காரணம்.!!
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்துகிறார்கள். அதிலும் குறிப்பாக ஸ்மார்ட் போன்கள் தான் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது.
செல்போன்களில் இருக்கும் சிறப்பம்சங்களை சில காணொளி மூலமாக பார்த்து தெரிந்து கொள்ளும் நாம் அதன் வெளிப்பகுதி பற்றி தெரிந்து வைத்திருப்பதில்லை. நம்முடைய செல்போனின் அடிப்பகுதியில் ஒரு சிறிய ஓட்டை இருப்பதை கவனித்திருப்பீர்கள். அது எதற்கு என்று நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அதாவது செல்போனில் கீழே இருக்கக்கூடிய மிகச் சிறிய துளை நம் போனின் இரைச்சலை ரத்து செய்யும் மைக்ரோஃபோன் ஆகும். அதாவது நாம் பேசும்போது செயல்படும் மைக்ரோஃபோன் தான் இது. நாம் யாரையாவது செல்போனில் அழைக்கும் போது இயக்கப்படும் இந்த மைக்ரோபோன் குறித்த சிறிய துளை நம் குரலை சரியாக பிக்கப் செய்து மறுமுனையில் கேட்பவருக்கு தெளிவாக கொடுக்கும். அதே நேரத்தில் சுற்றிலும் இரைச்சல் இருந்தாலும் இந்த மைக்ரோஃபோன் அனைத்துவித சத்தங்களையும் உள்வாங்காது. செல்போனில் அடிப்பகுதி என்பதால் இரைச்சலை உள்வாங்குவதில் தடை இருக்கும். அதேசமயம் நாம் பேசும் ஒலி மிக சரியாக துளை அருகே இருப்பதால் குரல் தெளிவாக எதிர்தரப்பில் இருப்பவருக்கு கேட்கும்.
No comments