வீட்டு சிலிண்டர் வாடிக்கையாளர்களே உஷார்! உஷார்!
நண்பர்களே சில நாட்களுக்கு முன்பு எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் தாங்கள் இன்று சிலிண்டர் ரீபில் புக் செய்துள்ளீர்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
எனக்கு பெரிய ஆச்சரியம். நான் எதுவும் சிலிண்டர் புக் செய்யவில்லை. அப்புறம் எப்படி இந்த மெசேஜ் எனக்கு வந்தது என்று குழப்பத்தில் ஆழ்ந்தேன். உடனடியாக எனது சிலிண்டர் நிறுவனத்தை தொடர்பு கொண்டேன் .
ஆனால் அவர்களோ எப்பொழுதும்போல் தொலைபேசியை தொடவில்லை. ஆனால் நீண்ட ரிங் சென்று நின்றுவிட்டது .மீண்டும் விடாமுயற்சி எடுத்து மதுரையில் உள்ள சிலிண்டர் தொடர்பான உயர் அதிகாரியிடம் பேசினேன். அப்பொழுது அவர் BAS மாதம்தோறும் தானாக சிலிண்டர் புக் செய்யும் சிஸ்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.
தாங்கள் ஜனவரி 1ஆம் தேதி புக் செய்திருந்தால் பிப்ரவரி 1ஆம் தேதி தானாக புக் செய்து கொள்ளும் .அதனை வேண்டாம் என்றால் தாங்கள் கம்பெனியில் சொல்லி தடுத்து நிறுத்திக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.
இந்த முறை மட்டும் தான் அதனை கேன்சல் செய்து தருவதாக என்னிடம் தெரிவித்தார். மீண்டும் அன்னார் அவர்களை தொடர்பு கொண்ட பொழுது அதனைத் தடுத்துக் கொள்வது கம்பெனியில் சொல்லி மட்டும்தான் செய்ய வேண்டும் என்று தெரிவித்துவிட்டார்.
தாங்கள் கேன்சல் செய்ததை நான் எப்படி அறிய முடியும் என்று கேட்டேன். அதற்கு அவர் அது தொடர்பாக உங்களுக்கு மெசேஜ் ஏதும் வராது. ஆனால் நான் கேன்சல் செய்து விட்டேன் என்று தெரிவித்தார்.
நான் விடாமுயற்சியுடன் மீண்டும் இணையம் வழியாக சென்று எனது கணக்கை பார்வையிட்டேன். அப்பொழுது அன்று தானாக புக் செய்யப்பட்ட சிலிண்டர் கேன்சல் செய்யப்பட்டிருந்தது உறுதிப்படுத்திக் கொண்டேன்.
மீண்டும் இணையத்தில் தேடும் பொழுது UNSUBSCRIBED BAS என்று குறிப்பிடப்பட்டிருந்தது. முயற்சி எடுத்து BAS என்பது BOOKING AFTER SMS என்பதை அண்ட் சப்ஸ்கிரைப் செய்து பிறகு , நான் புக் செய்யாமல் தற்போது எனக்கு எந்தவிதமான புக்கிங்கும் இனி வருங்காலத்தில் வராது என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.
நண்பர்களே நன்றாக யோசித்துப் பாருங்கள். உங்கள் மொபைல் மூலமாக ஐ வி ஆர் எஸ் இல் மட்டுமே நீங்கள் சிலிண்டர் புக் செய்ய முடியும் என்று முன்பு இருந்தது.
ஆன்லைன் மூலமாகவும் தாங்கள் புக் செய்யும் பொழுது உங்களது மொபைல் எண்ணுக்கு ஓடிபி வந்த பிறகுதான் புக் செய்ய முடியும். ஆனால் இது இரண்டுமே இல்லாமல் தற்பொழுது அவர்களாகவே புக் செய்யக் கூடிய வசதியை ஏற்படுத்திக் கொண்டு உள்ளார்கள்.
எனவே வாடிக்கையாளர்கள் ஆகிய நாம்தான் உஷாராக இருக்க வேண்டும். எனவே வீட்டு சிலிண்டர் வாடிக்கையாளர் அனைவரும் உஷாராக இருங்கள். தாங்கள் புக் செய்யாமல் குறுஞ்செய்தி வந்தால் உடனடியாக நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி.
அன்புடன்
எம்.எஸ்.லெட்சுமணன் ,
காரைக்குடி.
No comments