மீண்டும் 3 நாள் தொடர் விடுமுறை.! பள்ளிகளுக்கு மட்டுமல்ல அரசு அலுவலகங்களுக்கும்-வெளியான புதிய உத்தரவு:
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வீட்டிற்குள் மக்கள் முடங்கிக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எப்போது விடுமுறை கிடைக்கும் குளுமையாக இடங்களுக்கு சுற்றுலா செல்லலாம், சொந்த ஊருக்கு புறப்படலாம் என மக்கள் காத்துள்ளனர். அந்த வகையில் மார்ச் மாதத்தில் இறுதியில் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை மக்களை கொண்டாட வைத்தது. அதன் படி மார்ச் 29ஆம் தேதி முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை 4 நாட்கள் விடுமுறையால் மக்கள் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலாவிற்கு புறப்பட்டனர்.
ஏப்ரலில் தொடரும் விடுமுறை
இந்த நிலையில் இன்றோடு விடுமுறைகள் முடிவடைவதால் மீண்டும் எப்போது விடுமுறை வரும் என காலண்டரை பார்க்க தொடங்கியுள்ளனர். அந்த வகையில் ஏப்ரல் மாதத்தை பொறுத்தவரை விடுமுறைகள் இருந்தாலும் பள்ளி தேர்வுகள் என்பதால் மாணவர்கள் தேர்வில் கவனம் செலுத்த வேண்டியதுள்ளது.
இந்த நிலையில் ஏப்ரல் மாதம் தொடக்கத்தின் முதல் நாளே ஏப்ரல் 1 திங்கள் கிழமை வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு, ஏப்ரல் 10 வியாழக்கிழமை மகாவீரர் ஜெயந்தி, ஏப்ரல் 14 திங்கள் கிழமை தமிழ் புத்தாண்டு, ஏப்ரல் 18 வெள்ளிக்கிழமை புனித வெள்ளி ஆகிய நாட்கள் அரசு விடுமுறை தினமாக உள்ளது.
திருவாரூர் உள்ளூர் விடுமுறை
எனவே பள்ளி தேர்வுகள் முடிவடைவதற்குள் மாணவர்களுக்கு அடுத்தடுத்து விடுமுறை தினமாக உள்ளது. இந்த நிலையில் ஏப்ரல் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறையானது திருவாரூர் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி, திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வாக உள்ளது.
இந்த ஆழித்தேரோட்டம் திருவிழா ஏப்ரல் 7-ம் தேதி நடைபெறும். கோயில் மேற்கு புறத்தில் உள்ள கமலாலய குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைப்பெறுவது வழக்கமாகும் இந்த விழாவில் திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு இடங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஏப்.8ம் தேதி
இதனையடுத்து ஏப்ரல் 7ஆம் தேதி திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய நாட்கள் வார விடுமுறையான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வருவதால் தொடர்ந்து 3 நாட்கள் திருவாரூர் மாவட்ட மக்களுக்கு விடுமுறை கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரன் கூறுகையில், ஏப்.7 திங்களன்று உள்ளூர் விடுமுறை என்பதால், குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஏப்.8ம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளார்.
No comments