இடஒதுக்கீடு உச்சவரம்பு உயர்த்த ஸ்டாலின் கோரிக்கை!!!

சென்னை: 'கிரீமி லேயர் உச்சவரம்பை, 15 லட்சம் ரூபாயாக உயர்த்த, பிரதமர் மோடி சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை: இட ஒதுக்கீடு விஷயத்தில், இதர பிற்படுத்தப்பட்டோரில், 'கிரீமிலேயர்' எனப்படும்,
முன்னேறியவர்களை தவிர்ப்பதற்காக, 1993ல், ஆண்டுக்கு, 1 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் வருமானம் உள்ளவர்களுக்கு தான் ஒதுக்கீடு என, முதலில் நிர்ணயிக்கப்பட்டது. பின், படிப்படியாக உயர்த்தப்பட்டு, இன்றைக்கு, ஆறு லட்சம் ரூபாய் என்ற அளவில் உள்ளது.தற்போது, தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல கமிஷன், இந்த தொகையை, 15 லட்சம் ரூபாயாக நிர்ணயித்து, மத்திய அரசுக்கு, இரண்டாவது அறிக்கையை அனுப்பி வைத்தது. நீதிபதி ஈஸ்வரய்யா தலைமையிலான கமிஷன் அளித்த, இந்த உச்சவரம்பை ஏற்காமல், இப்போது, ஆண்டு வருமானம், எட்டு லட்சம் ரூபாய் என உயர்த்த, மத்திய அரசு முடிவு செய்திருப்பது, அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. எனவே, கமிஷன் அளித்துள்ள பரிந்துரைப்படி, ஆண்டு வருமானத்தை, 15 லட்சம் ரூபாயாக மத்திய அரசு உயர்த்த வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

No comments