SET EXAM RESULT PUBLISHED:
செட்' நுழைவு தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு
உதவி பேராசிரியர் பணிக்கான, மாநில அளவிலான, 'செட்' நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, 'நெட்' என்ற, தேசிய தகுதித் தேர்வு அல்லது 'செட்' என்ற, மாநில தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.ந்த ஆண்டுக்கான, 'செட்' தேர்வு, ஏப்., 23ல், தமிழகத்தில் நடந்தது. கொடைக்கானல் தெரசா பல்கலை நடத்திய தேர்வில், 60 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அவர்களில், அதிக மதிப்பெண் பெற்ற, 15 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 4,700 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விபரங்கள், www.tnsetexam2017mtwu.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகள்,நேற்று நண்பகலில் வெளியானதால், ஒரே நேரத்தில் பலரும் தேர்வு முடிவை தெரிந்து கொள்ள, இணையதளத்தை இயக்கினர்.அதனால், இணையதளம் முடங்கியது; பிற்பகலில் இயல்பு நிலைக்கு திரும்பியது.
No comments