Breaking News

MBBS GENERAL COUNSELLING-TODAY 25.08.2017:

அசல் சான்றிதழ் இல்லாவிட்டாலும் பங்கேற்கலாம் : மருத்துவ படிப்புக்கு இன்று பொது கவுன்சிலிங்

''எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., கவுன்சிலிங்கில்,அசல் சான்றிதழ்கள் இல்லையென்றாலும், மாணவர்கள் பங்கேற்கலாம்,'' என, சுகாதாரத்துறை செயலர், ராதாகிருஷ்ணன் கூறினார்.
தமிழகத்தில், 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கை நடத்த, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சென்னை, அரசு பல்நோக்கு மருத்துவமனையில், நேற்று, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் துவங்கியது. சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங்கை துவக்கி வைத்த, சுகாதாரத்துறை செயலர், ராதாகிருஷ்ணன் கூறியதாவது:விநாயகர் சதுர்த்தியுடன் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால், கவுன்சிலிங்கில் பங்கேற்க, 500 ரூபாய்க்கும், கல்வி கட்டணத்துக்காகவும், வங்கியில், 'டிடி' எடுக்க முடியாத நிலை ஏற்படலாம்; அதற்காக கவலைப்பட வேண்டாம். கவுன்சிலிங் நடைபெறும் இடத்தில், நேரடியாக பணத்தை செலுத்தி ரசீதை பெற்று கொள்ளலாம்; இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.'நீட்' தேர்வு அடிப்படையில், முதன் முதலாக கவுன்சிலிங் நடைபெறுகிறது.

No comments