Breaking News

Government School 11th Admission Related News:

மேல்நிலைக் கல்வி மாணவர் சேர்க்கையில் எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை அமல்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு.

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் பிளஸ் 1,பிளஸ் 2 மாணவர் சேர்க்கையில் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு 1990-ல் பிறப்பித்த அரசாணையை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுமதுரை ரத்தினபுரத்தைச் சேர்ந்த டி.ஆரோக்கியம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் சேர்க்கையில், குறிப்பாக கணிதம், அறிவியல் பாடப்பிரிவில் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு 18 சதவீதம், பழங்குடியின பிரிவு மாணவர்களுக்கு ஒரு சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என 1990-ம் ஆண்டில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.இருப்பினும் இந்த அரசாணை அமல்படுத்தப்படவில்லை.இதனால் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தாலும், ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் பாடப்பிரிவில் சீட் கிடைக்காத நிலை உள்ளது.மேல்நிலைக் கல்வியில் முதல் பிரிவு (கணிதம், அறிவியல், கணினி அறிவியல்) பயிலும் மாணவர்கள் மட்டுமே பொறியியல் படிப்பில் சேர முடிகிறது. அதே நேரத்தில் ஆதிதிராவிடர்வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு முதல் பிரிவில் பயிலும் வாய்ப்பு கிடைப்பதில்லை. எனவே, இடஒதுக்கீடு வழங்கும் அரசாணையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ‘சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தவிர்த்து பிற கல்வி நிறுவனங்களில் மேல்நிலைக் கல்வியில் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டது.மனுதார் வழக்கறிஞர் அழகுமணி, ‘அரசாணைப்படி, சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு விலக்கு கூடாது’ என்றார்.

இதையடுத்து மேல்நிலைக் கல்வியில் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக 1990-ல் பிறப்பித்த அரசாணையை தமிழக அரசு தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments