Breaking News

தமிழ்நாடு அரசு துறையில் வேலை..!! மாத சம்பளம் ரூ.45,000..!! தேர்வு கிடையாது..!! விண்ணப்பிக்க மே 5ஆம் தேதியே கடைசி..!!

 


தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாகயாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் : தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை

வகை : தமிழ்நாடு அரசு வேலை

பணியின் பெயர் : Ombudsperson (குறைதீர்ப்பாளர்கள்)

காலியிடங்கள் : 23

பணியிடம் : தமிழ்நாடு

கல்வித் தகுதி : Any Degree

வயது வரம்பு : இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 68 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

சம்பளம் : குறைதீர்ப்பாளர் பணிக்கு ஒரு அமர்வுக்கு ஊதியமாக ரூ.2,250 வழங்கப்படும் என்றும், அதிகபட்சமாக மாத சம்பளமான ரூ.45,000 வரை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் : விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.05.2025

விண்ணப்பிக்கும் முறை :

https://tnrd.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர், அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளுடன் “Commissioner of Rural Development and Panchayat Raj, Saidapet, Panagal Building, Chennai – 600015” என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


No comments