முட்டை இல்லாமல் ஆம்லெட் போட தெரியுமா..? சைவப் பிரியர்களுக்கான புரோட்டீன் ரெசிபி..!
அசைவப் பிரியர்களுக்கு புரோட்டீன் சத்து கிடைப்பது எளிது. அவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முட்டை சாப்பிட்டு வந்தாலே புரோட்டீன் பற்றாக்குறையை தீர்த்துவிடலாம்.
ஆனால் சைவப்பிரியர்களுக்கு புரோட்டீன் கிடைப்பது கொஞ்சம் கடினம்.
புரோட்டீன் நிறைந்த உணவுகளை தேடித்தேடி சமைத்து சாப்பிட வேண்டும். இனி அந்த
கவலை வேண்டாம், புரோட்டீன் நிறைந்த இந்த சைவ ஆம்லெட்டை இனி அடிக்கடி
போட்டு சாப்பிடுங்க...
தேவையான பொருட்கள் :
கடலை பருப்பு, துவரம் பருப்பு, பாசி பருப்பு - 50 கிராம்
உளுந்து, முந்திரி , மக்காச்சோளம் - 50 கிராம்
முழு கோதுமை - 50 கிராம்
பெரிய வெங்காயம் - 1
கறிவேப்பிலை, மஞ்சள் தூள் , உப்பு, மிளகுத்தூள் மற்றும் எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
பருப்பு வகைகளை தனித்தனியே எண்ணெய் இல்லாமல் வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
அதேபோல் உளுந்து, முந்திரி , மக்காச்சோளத்தையும் தனித்தனியாக வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
இப்போது அனைத்தையும் மிக்ஸில் போட்டு கொரகொரப்பாக அரைக்க வேண்டும்.
பின் அதை ஒரு கிண்ணத்தில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கலக்க வேண்டும்.
பின் கொடுக்கப்பட்டுள்ள மற்ற பொருட்கள் அனைத்தையும் அதில் சேர்த்து கலக்க வேண்டும்.
இப்போது தோசைக்கல் வைத்து காய்ந்ததும் தோசை போல் சுட்டு எடுக்க சைவ ஆம்லெட் தயாராகிவிடும்.

No comments