Breaking News

தமிழ்நாட்டில் எத்தனை நாட்களுக்கு மழை பெய்யும்? "ரெயின்" ரமணன் கொடுத்த முக்கிய வார்னிங்

தமிழ்நாட்டில் இன்றில் இருந்து 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று முன்னாள் சென்னை வானிலை மைய இயக்குனர் ரமணன் பேட்டி அளித்துள்ளார்.

ஒன்இந்தியா தமிழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில் இந்த தகவலை தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இன்று தமிழ்நாட்டில் சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி , மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்யும்.


ரமணன் பேட்டி

இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்றில் இருந்து 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று முன்னாள் சென்னை வானிலை மைய இயக்குனர் ரமணன் பேட்டி அளித்துள்ளார். மழை பெய்யும் அளவை வைத்து அதை கனமழை, மிக கனமழை என்று பிரிப்பார்கள். தமிழ்நாட்டில் நேற்று சில இடங்களில் மிக கனமழை பெய்துள்ளது. குறிப்பிட்ட இடங்களில் கனமழை பெய்து உள்ளது. அநேக இடங்களில் மழை பெய்து உள்ளது.

கனமழை

கனமழை என்றால் 13 செமீக்கு குறைவாக மழை பெய்யும். அதன்படி தமிழ்நாட்டில் இன்றும். அடுத்த 3 நாட்களுக்கும் கனமழை பெய்யும். அநேக இடங்களில் என்றால் 75 விழுக்காடு அளவிற்கு தமிழ்நாட்டில் மழை பெய்யும். சென்னையில் இதற்கு முன் 1976ல் ஒரே நாளில் 45 செமீ மழை எல்லாம் பெய்து உள்ளது. அந்த அளவிற்கு இப்போது மழை பெய்யவில்லை. தீவிர மழை சென்னையில் பெய்யவில்லை.

வடகிழக்கு பருவமழை

டிசம்பர் இறுதிவரை பெய்யும் மழை வடகிழக்கு பருவமழை. ஏற்கனவே ஆகஸ்ட் மாதம் நல்ல மழை பெய்தது. இருந்தாலும் நீரை சிறப்பாக கையாள வேண்டும். இது அரசாங்கம் கையில் மட்டும் இல்லை. தனி மனிதர்களும் நீரை நன்றாக கையாள வேண்டும். நமக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்படாது. இருந்தாலும் தண்ணீரை சேமிக்க வேண்டும்.

மழை அளவு

மீனவர்கள் வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையின்படி செயல்பட வேண்டும். மீனவர்களுக்கு காற்று அளவை பொறுத்து பொதுவாக எச்சரிக்கை விடுக்கப்படும். அவர்கள் கொடுத்துள்ள எச்சரிக்கையின்படி செயல்பட வேண்டும் என்று ரமணன் வலியுறுத்தி உள்ளார். அதன்படி தமிழ்நாட்டில் கடலோர பகுதிகளில் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும். மன்னார் வளைகுடா அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்ககடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்றுவீசும். அதனா;மீனவர்கள் 2 நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

No comments