Breaking News

தமிழக அரசு வேலை வாய்ப்பு; டிகிரி தகுதி; ரூ.18000 சம்பளம்; உடனே அப்ளை பண்ணுங்க!

 

தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்படும், ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள தரவு பகுப்பாளர் பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 10.11.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். 

தரவு பகுப்பாளர் (Data Analyst)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் புள்ளியல்/ கணிதப் பொருளாதாரம்/ கணினி (BCA) பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 42 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 18,536

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3bca82e41ee7b0833588399b1fcd177c7/uploads/2025/10/17618231016927.pdff என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட ஆட்சியரக கூடுதல் கட்டிடம், 6வது தளம், ஈரோடு மாவட்டம் - 638011

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.11.2025

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

APPLY CLICK HERE 

No comments