இந்தியாவில்
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-இன்படி இடைநிலை மற்றும் பட்டதாரி
ஆசிரியர்கள் பணியில் சேருவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாட்டில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர்
தகுதித் தேர்வு நடத்தப்பட்டு, பணி நியமனங்கள் நடைபெற்று வருகின்றன. 150
மதிப்பெண்களுக்கு நடைபெறும் இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு, பொதுப்பிரிவை
சேர்ந்தவர்கள் 90 மதிப்பெண்களும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும்
பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர்கள் 82 மதிப்பெண்களும் எடுக்க
வேண்டும்.இந்நிலையில் 2025 ஆம் ஆண்டு நவம்பர் 15 மற்றும் 16 நடைபெற்ற டெட் தாள் 1
மற்றும் தாள் 2 தேர்வுகளுக்கான தகுதி குறைந்தபட்ச மதிப்பெண்களை 55
சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக மாற்றி அறிவிக்க வேண்டி தமிழ்நாடு பட்டதாரி
ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
தமிழ்நாடு
ஆசிரியர் தகுதித் தேர்வு 2025, தாள்-1 மற்றும் தாள்-2 ஆகியவை 15.11.2025
மற்றும் 16.11.2025 அன்று மாநிலம் முழுவதும் சிறப்பாக நடைபெற்றன. இரு தேர்வுகளிலும் 3.75 லட்சத்திற்கும் அதிகமான தேர்வர்கள் பங்கேற்றனர்.
குறிப்பாக, உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி தகுதித் தேர்ச்சி பெறுதல் அவசியமான பணியில் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இத்தேர்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கல்வி
உரிமைச் சட்டம் (RTE Act, 2009) அமலுக்கு முன்பு நியமிக்கப்பட்ட
ஆசிரியர்களும் TET தேர்ச்சியைப் பெற்றிருக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற
உத்தரவின்படி, பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு இது முக்கியமான மற்றும்
தவிர்க்க முடியாத தகுதி நிபந்தனையாக மாறியுள்ளது.
இந்நிலையில்,
பல வருடங்களாகப் பள்ளிக் கல்விச் சேவையில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள்,
தங்கள் சேவைத் தொடர்ச்சி, பதவி உயர்வு மற்றும் ஊதிய மேம்பாட்டை
நிலைநிறுத்திக்கொள்ள, TET தேர்ச்சி பெற வேண்டிய கட்டாய சூழல்
ஏற்பட்டுள்ளது. இத்தகைய நிலைக்குள், TNTET தேர்விற்கான தற்போதைய 55 சதவீத (150-க்கு 82 மதிப்பெண்கள்) குறைந்தபட்ச தகுதி அளவு, அனுபவமிக்க ஆசிரியர்களுக்கு நடைமுறை சவால்களை உருவாக்குகிறது. இவர்களின் பணிச்சுமை, வயது சார்ந்த காரணிகள், பாடசாலைச் செயல்பாடுகளின் தொடர்ச்சி மற்றும் தேர்வு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து பார்க்கும்போது, தகுதி சதவீதத்தை மறுபரிசீலனை செய்வது இன்றியமையாததாகத் தெரிகிறது. அரசு பரிசீலனைக்கான வலுவான காரணங்கள்:
தகுதித் தேர்வு மற்றும் நியமனத் தேர்வு இரு வேறு நடைமுறைகள்:
TET தேர்வு தகுதி உறுதிப்படுத்தும் தன்மையை மட்டுமே கொண்டது. நியமனம் தனித்தனி போட்டித் தேர்வு, ஒதுக்கீடு மற்றும் தகுதிச்சான்றுகள் மூலம் நடைபெறும்.
எனவே தகுதி சதவீதத் தளர்வு நியமன வாய்ப்பினை பாதிப்பதில்லை பணியில் உள்ள ஆசிரியர்களின் அதிகளவு பங்கேற்பு:
இந்த ஆண்டு பணியில் உள்ள ஆசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்றுள்ளனர்.
இந்திய மாநிலங்களின் சமீபத்திய நடைமுறைகள்:
பல மாநிலங்களில் தகுதி சதவீதம் ஏற்கனவே 50% அல்லது அதற்கு குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர
மாநிலத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் என்ற உச்ச நீதிமன்றத்தின்
அறிவிப்புக்கு பிறகு தகுதி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்
குறைக்கப்பட்டுள்ளது.
பிற மாநிலங்களில் உள்ள தகுதி மதிப்பெண்கள்:
| வ.எண் | மாநிலம் | OBC | OTHERS |
| 1 | ஆந்திரப் பிரதேசம் | BC: 50% | SC/ST: 40% |
| 2 | தெலங்கானா | BC: 50% | SC/ST: 40% |
| 3 | பீகார் | 50% | 45% |
| 4 | உத்தரப்பிரதேசம் | 55% | 45% |
| 5 | ஹரியானா | 50% | 50% |
| 6 | ஒடிசா | அனைத்து ஒதுக்கீடு பிரிவுகளுக்கும்: 50% | அனைத்து ஒதுக்கீடு பிரிவுகளுக்கும்: 50% |
No comments