நீரிழிவு நோயாளிகள் இட்லி மற்றும் தோசை சாப்பிடலாமா..? மருத்துவர்கள் சொல்லும் பதில்..!
இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காமல் நீரிழிவு நோயாளிகளின் டயட் உணவில் இட்லி மற்றும் தோசைகளை எடுத்துக் கொள்ளலாமா என்பது தான். இதற்கு பதில், அவற்றை புத்திசாலித்தனமாக தயாரித்து சாப்பிடும்போது நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். சரியான பொருட்கள், அளவு கட்டுப்பாடு மற்றும் சிறந்த தேர்வுகளுடன், இந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம்.
அதாவது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காமல்
நீரிழிவு நோயாளிகளின் டயட் உணவில் இட்லி மற்றும் தோசைகளை எடுத்துக்
கொள்ளலாமா என்பது தான். இதற்கு பதில், அவற்றை புத்திசாலித்தனமாக தயாரித்து
சாப்பிடும்போது நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். சரியான
பொருட்கள், அளவு கட்டுப்பாடு மற்றும் சிறந்த தேர்வுகளுடன், இந்த உணவுகளை
எடுத்துக் கொண்டால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம்.
இட்லி மற்றும் தோசை இரத்த சர்க்கரையை எவ்வாறு பாதிக்கிறது?
பாரம்பரிய
இட்லி மற்றும் தோசைகளானது அரிசி மற்றும் உளுத்தம்பருப்பு ஆகியவற்றின்
புளித்த மாவைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. இதை அதிகமாக சாப்பிட்டால்
இரத்த குளுக்கோஸ் அளவை உயர்த்தும். தினை அடிப்படையிலான உணவுகள் குறித்த
ஃபிரான்டியர்ஸ் இன் நியூட்ரிஷன் மெட்டா அனாலிசிஸின்படி (2021), பாலிஷ்
செய்யப்பட்ட வெள்ளை அரிசிக்கு பதிலாக ஃபாக்ஸ்டெயில் மில்லெட் (தினை),
ஃபிங்கர் மில்லெட் (ராகி) அல்லது பியர்ல் மில்லெட் (பஜ்ரா) போன்ற தினைகளை
எடுத்துக் கொள்வது சாப்பிடுவதற்கு முன் குளுக்கோஸ் அளவையும் மற்றும்
சாப்பிடுவதற்கு பின் குளுக்கோஸ் அளவையும் கணிசமாகக் குறைக்க உதவுகிறது.
நார்ச்சத்து மற்றும் மாவுச்சத்து நிறைந்த இந்த தானியங்களானது, மெதுவாக
ஜீரணமாகி, நீண்ட நேரத்திற்கு இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க
உதவுகின்றன.

No comments