அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு.. மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா?
பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு கால அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 24ஆம் தேதியில் இருந்து அரையாண்டு விடுமுறை தொடங்குகிறது. விடுமுறைக்கு பின் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பதை தற்போது பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு கால அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டார். அதன்படி, ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 15 ஆம் தேதி தொடங்கி, 23ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறவுள்ளன.
பிளஸ் ஒன், பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பிற்கு டிசம்பர் 10ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெறுகிறது. பத்தாம் வகுப்பை பொறுத்தவரையில், டிசம்பர் 10ஆம் தேதி தமிழ், 12ஆம் தேதி ஆங்கிலம், 15ஆம் தேதி கணித தேர்வு நடைபெறும் எனவும், டிசம்பர் 18ஆம் தேதி அறிவியல், 22ஆம் தேதி சமூக அறிவியல், 23ஆம் தேதி விருப்பத் தேர்வுகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
அதேபோல, பிளஸ் டூ மாணவர்களுக்கு டிசம்பர் 10ஆம் தேதி தமிழ், 12ஆம் தேதி ஆங்கிலம், 15ஆம் தேதி கணித தேர்வு நடைபெறும் எனவும், டிசம்பர் 17ஆம் தேதி வேதியியல், 19ஆம் தேதி இயற்பியல், 22ஆம் தேதி உயிரியல், 23ஆம் தேதி கணினி அறிவியல் தேர்வும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பிட்ட அந்த தேதிகளில் பிற பிரிவு மாணவர்களுக்கான தேர்வுகளும் நடைபெறவுள்ளன. பத்தாம் வகுப்பு, பிளஸ் ஒன், பிளஸ் டூ மாணவர்களுக்கு காலை 9.45 மணி முதல் மதியம் ஒரு மணி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி தமிழ் தேர்வும், அடுத்தநாள் ஆங்கிலமும், டிசம்பர் 17ஆம் தேதி விருப்ப மொழித் தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பம் 18ஆம் தேதி கணிதமும், 19ஆம் தேதி உடற்பயிற்சி தேர்வும், 22ஆம் தேதி அறிவியல் தேர்வும், 23ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வும் நடைபெறவுள்ளது.
மொத்தத்தில் டிசம்பர் 23ஆம் தேதியோடு பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் நிறைவடைகின்றன. டிசம்பர் 24ஆம் தேதி முதல் அரையாண்டு விடுமுறை தொடங்குகிறது. அரையாண்டு தேர்வுக்கு பின் ஜனவரி 5 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. அரையாண்டு தேர்வுக்கு 12 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட உள்ளது.
அரையாண்டு தேர்வு விடுமுறையை பொறுத்தவரை கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்த பின் பள்ளிகள் திறக்கப்படும். அதன்படி ஜனவரி 2 வெள்ளிக்கிழமையை அடுத்து வார விடுமுறை நாட்கள் சனி மற்றும் ஞாயிறு உள்ளன. அதனால் ஜனவரி 5 (திங்கள் கிழமை) பள்ளிகள் திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

No comments