Breaking News

தாமதமாகும் ஐ.டி., ரீபண்டு வருமான வரித்துறை விளக்கம்

 


வருமான வரி செலுத்தியதில் கூடுதல் தொகையை ரீபண்டு தருவதில் தாமதம் ஏன் என மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் ரவி அகர்வால் விளக்கம் அளித்துள்ளார்.

டில்லியில் நேற்று அவர் கூறியதாவது:

வருமான கணக்கு தாக்கலில், தவறான கழிவுகளை பலர் காட்டியுள்ளதை ஆராய வேண்டியிருக்கிறது. அதிலும், சில கணக்குகளில் கிளெய்ம் தொகை மிக அதிகமாக உள்ளதாக, சிஸ்டம் எச்சரித்துள்ளது.

இதனால், ரீபண்டு வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. சரியான ரீபண்டு கணக்குகளில் டிசம்பர் இறுதிக்குள் பணம் செலுத்தப்பட்டு விடும்.

சில கணக்குகளில் வரி செலுத்துபவர் மறந்து போன விவரங்களை பதிவிட்டு புதிய படிவம் தாக்கல் செய்யுமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, குறைந்த தொகை கிளெய்ம்கள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் வரும் டிசம்பர் மாதத்துக்குள் முடிந்து விடும்.

ஏப்., 1 - நவ., 10ல் 2.42 லட்சம் கோடி ரூபாய் வருமான வரி ரீபண்டு தரப்பட்டது. இது கடந்த ஆண்டைவிட 18 சதவீதம் குறைவு

 

No comments