நெருங்கும் கடைசி தேதி... டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
ஒவ்வொரு பதவிக்குமான வயது வரம்பு, சம்பளம், நிபந்தனைகள், கூடுதல் தகுதிகள், ஆதாரச் சான்றுகள், உடற்தகுதி தேர்வாணையத்தின் அறிவிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன
தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு -II (தொகுதி II மற்றும் IIA பணிகள்)-இல் உள்ள பதவிகளுக்கு இணையவழியில் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு விரைவில் நிறைவடைகிறது. எனவே, ஆர்வமுள்ள தேர்வர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தமிழ்நாட்டு இளைஞர்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த குரூப் 2 தேர்வுக்கான அறிவிக்கை கடந்த ஜுலை மாதம் 15ம் தேதி வெளியானது. விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் மாதம் 13ம் தேதியாகும். எனவே, தேர்வர்கள் கடைசி நேரம்வரை இழுக்காமல் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
குரூப் II பணிகளின் கீழ் 50 காலியிடஙகளும் , குரூப் II- A பணிகளின் கீழ் 595 காலியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. பல்கலைக்கழக மானிய குழுவால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பதவிக்குமான வயது வரம்பு, சம்பளம், நிபந்தனைகள், கூடுதல் தகுதிகள், ஆதாரச் சான்றுகள், உடற்தகுதி தேர்வாணையத்தின் அறிவிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. தேர்வர்கள், tnpsc.gov.in என்ற இணையத்தளத்திற்கு சென்று தீவு அறிவிக்கையை பதிவிறக்கம் செய்து பயனடையலாம்.
தேர்வுமுறை: குரூப் II/ II A பணிகளுக்கு பொது முதல்நிலைத் தேர்வு நடத்தப்படும். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். இரண்டு பணிகளுக்கும் தனித்தனியாக முதன்மைத் தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பம் செய்வது எப்படி? தேர்வர்கள் www.tnpscexams.in எனும் தேர்வாணையத்தின் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தேர்வர்கள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள ஒருமுறைப் பதிவு தளத்தில் (OTR) பதிவு செய்த பின்பு இத்தேர்விற்கான விண்ணப்பத்தினை நிரப்ப வேண்டும். தேர்வர்கள் ஏற்கனவே ஒருமுறைப்பதிவில் பதிவு செய்திருப்பின், அவர்கள் இத்தேர்விற்கான இணையவழி விண்ணப்பத்தை நேரடியாக பூர்த்தி செய்யத் தொடங்கலாம்.
No comments