வருமான வரி கணக்கு தாக்கல் பண்ணிட்டீங்களா? Refund வாங்க காத்திருப்பவர்களுக்கு.. ஷாக் செய்தி!
நாடு முழுவதும் வருமான வரிக் கணக்கு (ஐ.டி.ஆர்) சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நெருங்கி வருகிறது. லட்சக்கணக்கான வரி செலுத்துவோர் ஐடிஆர் தாக்கல் செய்துவிட்டு refund வரும் என்று எதிர்பார்த்துள்ளனர். செப்டம்பர் 15 அன்று ஐடிஆர் தாக்கல் செய்யும் காலக்கெடு முடிகிறது.
பொதுவாக வரி செலுத்துவோருக்கு ITR சமர்ப்பிப்புடன் பணி முடிவதில்லை. சமர்ப்பித்த பிறகு, அதை உறுதிப்படுத்த வேண்டும். உறுதிப்படுத்தப்பட்டவுடன், வரித்துறையால் அது பரிசீலிக்கப்படும். பரிசீலனை முடிந்ததும், 'பரிசீலனை நிறைவுற்றது' என்ற அறிவிப்பு வரி இணையதளத்தில் தெரியும்.
ஐ.டி.ஆர் சமர்ப்பித்த 30 நாட்களுக்குள் அதை மின்முறையில் உறுதிப்படுத்தத் தவறினால், வருமான வரிக் கணக்கு செல்லாததாகிவிடும். அதாவது e-verification செய்ய வேண்டும். இல்லையென்றால் பணத்தைத் refund பெறுவதில் தாமதம் ஏற்படும். சில நேரங்களில், ஐ.டி.ஆர் உறுதிப்படுத்தப்பட்ட பின்பும், பரிசீலனைக்கு வழக்கத்தைவிட அதிக நேரம் ஆகலாம்.
ஐ.டி.ஆர் பரிசீலனைக்கு எவ்வளவு காலம் ஆகும்?
வருமான வரிக் கணக்கை சமர்ப்பிக்கும் முன், வரி செலுத்துவோர் முக்கியமாக சிலவற்றை உறுதிப்படுத்த வேண்டும். வருமானம், செலவு மற்றும் செலுத்தப்பட்ட வரிகள் அனைத்தும் துல்லியமாக உள்ளதா என சரிபார்க்க வேண்டும். சமர்ப்பித்த பிறகு, ஆதார் ஓ.டி.பி அல்லது நெட் பேங்கிங் மூலம் தங்கள் கோரிக்கையை உறுதியாக்கலாம்.
வழக்கமான உறுதிப்படுத்தல் முறையைத் தேர்வு செய்தால், கையொப்பமிட்ட ஐ.டி.ஆர்-வி படிவத்தை அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும். இல்லையென்றால் அனைத்தையும் எளிமையாக ஆன்லைன் வழியே செய்யலாம். ஐ.டி.ஆரைச் சரிபார்த்த பிறகு, தகவல் துல்லியம் மற்றும் வரி கணக்கீட்டுப் பொருத்தமின்மைகளை ஐ.டி துறை சரிபார்க்கிறது. இந்தச் சரிபார்ப்புக்கு பின்னரே ஐ.டி.ஆர் செயலாக்கப்படும். இது சில நாட்கள் முதல் 6 மாதங்கள் வரை ஆகலாம். வருமானத்தின் சிக்கலான தன்மையைப் பொறுத்தது. .
வருமானத்தின் சிக்கலான தன்மை ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். ஐ.டி.ஆர் 1 விரைவாகச் செயலாக்கப்படும். ஏனெனில் அதில் மூலதன ஆதாயம் அல்லது வணிக வருமானம் இல்லை. எளிய கணக்குகள் விரைவாகக் கையாளப்படுகின்றன.
வருமான வரி காலக்கெடு நீட்டிப்பு
வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி மீண்டும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது செப்டம்பர் 15 ஆம் தேதி கடைசி நாளாக உள்ள நிலையில், மேலும் பல லட்சம் பேரின் வருமான வரி இன்னும் ஆய்வு செய்யப்படாமல் உள்ளதால் இந்த நீட்டிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பளம் பெறுவோர் மற்றும் வணிக உரிமையாளர்கள் உட்பட பலர் தற்போது வருமான வரி அறிக்கைகளை தாக்கல் செய்வதில் முனைப்புடன் ஈடுபட்டுள்ளனர். இந்த சூழலில், வருமான வரித் துறை தரவு பகுப்பாய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வரி விலக்குகளை தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
வருமான வரி தாக்கல்
மோசடியான வரி விலக்குகளைக் கண்டறிய நாடு முழுவதும் சரிபார்ப்பு நடவடிக்கையை வருமான வரித் துறை தொடங்கியுள்ளது. மருத்துவக் காப்பீடு, வீட்டு வாடகைப்படி (HRA), கல்வி, வீட்டுக் கடன் வட்டி, வாகனக் கடன்களுக்கான விலக்குகள், அரசியல் கட்சிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கான நன்கொடைகள் ஆகியவை இந்த ஆய்வில் அடங்கும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) தெரிவித்துள்ளது.
வருமான வரித் துறை AI மற்றும் தரவு பகுப்பாய்வுக் கருவிகளின் உதவியுடன் வரி சலுகைக் கோரிக்கைகளை கவனமாக ஆராய்ந்து வருகிறது. தவறாக தாக்கல் செய்யப்பட்ட வரி அறிக்கைகளை அடையாளம் காண நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
உங்கள் ஐ.டி.ஆர் பரிசீலனை ஏன் தாமதமாகிறது?
ஐ.டி.ஆர் பரிசீலனை அமைப்பு பொதுவாகத் தானியங்கி முறையில் செயல்படுகிறது. வருடாந்திர கட்டணத்துடன் விவரங்கள் சரியாகப் பொருந்தினால், ஐ.டி.ஆர் எளிதாகப் பரிசீலிக்கப்படும்.
ஆனால், மூலதன ஆதாயம் அல்லது வணிக வருமானம் இருந்தால், அதைச் செயலாக்குவதற்கு முன், படிவம் 26ஏஎஸ் (Form 26AS) மற்றும் வருடாந்திர தகவல் அறிக்கை (AIS) ஆகியவைப் சரிபார்க்கப்படும். இது அதிக நேரம் எடுக்கும். இதனால் பலருக்கும் இன்னும் refund வரலாம் உள்ளது. இதுவரை தாக்கல் செய்த பலரில் வெறும் 40% பேருக்கு மட்டுமே வருமான வரி refund வந்துள்ளது.
சரிபார்த்த பிறகும் உங்கள் ஐ.டி.ஆர் பரிசீலிக்கப்படாவிட்டால் என்ன செய்ய வேண்டும்?
ஒரு வரி செலுத்துபவர் தங்கள் ஐ.டி.ஆரைச் சமர்ப்பித்து உறுதிப்படுத்திய பின்னர், அதைப் பரிசீலிக்கும் முழு பொறுப்பும் வருமான வரித் துறையைச் சார்ந்தது. ஒரு நபரின் வருமான விவரங்கள் உண்மையானவற்றுடன் பொருந்தவில்லை என்றால், வரித்துறை பொருத்தமின்மை குறித்து உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பும்.
அதற்குப் பிறகு, வரி செலுத்துபவர் தங்கள் ஐ.டி.ஆரில் தேவையான திருத்தங்களைச் செய்ய வேண்டும். உதாரணமாக, ஒரு நபர் நிலையான வைப்புத்தொகை (எஃப்.டி) மூலம் வட்டி பெற்றால், அதை ஐ.டி.ஆரில் அறிவிக்கவில்லை என்றால், அவருக்கு அறிவிப்பு வரலாம். இதைத் தவிர்க்க, வரி செலுத்துபவருக்கு இரண்டு விருப்பங்கள் உள்ளன.
வரித்துறைக்கு ஐ.டி.ஆரை நிராகரிக்கும் அதிகாரம் உள்ளது. ஆனால், இந்த நடவடிக்கையை எடுப்பதற்கு முன், வரி செலுத்துபவருக்குக் குறைபாடுள்ள கணக்கு பற்றிய அறிவிப்பு வழங்கப்படும். அந்தத் தவறைச் சரிசெய்ய வரி செலுத்துபவருக்கு வாய்ப்பு வழங்கப்படும். அவர்கள் அதைச் சரிசெய்யவில்லை என்றால் மட்டுமே, ஐ.டி.ஆர் நிராகரிக்கப்படும்.
No comments