Breaking News

9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹேப்பி: புத்தகங்களை பார்த்து தேர்வு எழுத சிபிஎஸ்இ ஒப்புதல் :

 


2026-27 கல்வியாண்டு முதல் 9ம் வகுப்பில் திறந்த புத்தக மதிப்பீடுகளை ஒருங்கிணைக்கும் புதிய திட்டத்துக்கு மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ ஒப்புதல் அளித்துள்ளது.

தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் பாடத்திட்டம், தேர்வு முறைகளில் சிபிஎஸ்இ பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக, 9ம் வகுப்பில் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதும் வகையில் திறந்த புத்தக மதிப்பீடுகளை ஒருங்கிணைக்கும் புதிய திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து இருக்கிறது.

சிபிஎஸ்இ புதிய நடைமுறையின் கீழ் ஒவ்வொரு பருவத்திலும் முக்கிய பாடங்களான மொழிப்பாடம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகியவற்றை உள்ளடக்கிய எழுத்துத் தேர்வுகள் நடத்தப்படும்.

2026-27 கல்வியாண்டில் 9ம் வகுப்பு மாணவர்கள் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதும் திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதற்கான ஒப்புதலை சிபிஎஸ்இ வாரியத்தில் முக்கிய முடிவுகளை மேற்கொள்ளும் நிர்வாக குழு அளித்துள்ளது.

இத்திட்டம், திறன் அடிப்படையிலான கற்றல் மற்றும் அதனை ஊக்குவிப்பது, மனப்பாடம் செய்வதை குறைப்பது ஆகியவற்றை நோக்கமாக கொண்டது ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

No comments