Breaking News

Group 4: குரூப் 4 தேர்வர்களுக்கு குட்நியூஸ்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட சூப்பர் அப்டேட்.. உடனே செக் பண்ணுங்க

 


டிஎன்பிஎஸ்சி குரூப் 4-க்கான ரிசல்ட் (TNPSC Group 4 Exam Results) எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. விஏஓ, இளநிலை உதவியாளர் உள்பட 3,935 பணியிடங்களை நிரப்ப நடைபெற்ற இந்த தேர்வை மொத்தம் 11,48,019 பேர் எழுதியிருந்தனர். இந்நிலையில், குரூப் 4 தேர்வு முடிவுகள் வரும் அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழக அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம், தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பணியை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை 12 ஆம் தேதி நடைபெற்றது. விஏஓ, இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 3,935 பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வானது நடைபெற்றது.

குரூப் 4 தேர்வு ரிசல்ட்?

குரூப் 4 தேர்வை எழுத சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில், 11,48,019 பேர் தேர்வு எழுதியிருந்தனர். 2,41,719 பேர் தேர்வு எழுதவில்லை. இதனால் ஒரு இடத்திற்கு 292 பேர் போட்டியிடுகின்றனர். தேர்வு கடினமாக இருந்ததாக கூறப்படுகிறது. தேர்வர்கள் பலரும் தமிழ் மொழித் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் பாடத்திட்டத்திற்கு வெளியில் இருந்து கேட்கப்பட்டிருந்ததாக கூறினர்.

தேர்வு முடிந்த பிறகே ரிசல்ட் அடுத்த 3 மாதத்திற்குள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் தற்போது குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்பதை டிஎன்பிஸ்சி அறிவித்துள்ளது. அதாவது அக்டோபர் மாதத்தில் குரூப் 4 முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் தேர்வு எழுதி ரிசல்ட்டுக்காக தயாராக இருப்பவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்குமா?

தற்போது, 3,935 பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 4 தேர்வு நடந்துள்ளது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ரிசல்ட்டுக்கு பிறகு பணியிடங்கள் அதிகரிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஏனென்றல், கடந்த ஆண்டு குரூப் 4 - தேர்வில் முதலில் 6,244 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு, பின்னர் பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டு பணியிடங்கள் எண்ணிக்கை 9,532 ஆக உயர்த்தப்பட்டது.

இதேபோல் நடப்பு ஆண்டிலும் குரூப் 4 தேர்வில் பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தேர்வர்கள் காத்திருந்து உள்ளனர். இது தொடர்பாக முன்னதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் பேட்டி ஒன்று கூறும்போது, "நடப்பு ஆண்டு குரூப் 4 தேர்வில் மொத்தம் 3,935 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தோராயமாக குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கை தான். தேர்வுகள் முடிந்த பிறகு கவுன்சிலிங் தொடங்கும் வரை காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்

பல்வேறு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்கள் வரும். அப்போது, குரூப் 4 காலியிடங்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும். எனவே, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் எண்ணிக்கையை விட நிச்சயமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது" என்று கூறியிருந்தார்.

 

 

 

No comments