பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுமா? - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதில்
2004
ஜனவரி 1ம் தேதிக்குப்பின் மத்திய அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு தேசிய
ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்குமுன் பழைய ஓய்வூதிய
திட்டம் அமலில் இருந்தது. பழைய ஓய்வூதிய திட்டத்தில் அதிக பலன்
கிடைத்ததாகவும், அந்த திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும்
மத்திய அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படுமா? என்று நாடாளுமன்றத்தின் உறுப்பினர் இன்று கேள்வி எழுப்பினார்.
அந்த கேள்விக்கு பதில் அளித்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும் திட்டமில்லை. இது தொடர்பாக அரசு எந்த பரிசீலனையும் செய்யவில்லை. மத்திய அரசின் அதிக அளவினான நிதி பொறுப்பு காரணமாக பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும் திட்டம் தற்போதைக்கு எதுவும் இல்லை’ என்றார்.
No comments