Breaking News

TNPSC Group 4 Exam Results: தேர்வு முடிவுகள் எப்போது.. கட் ஆப் மதிப்பெண் யாருக்கு சாதகம்... உண்மை நிலவரம் என்ன?

 


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜுலை மாதம் 12 ஆம் தேதி குரூப்-4 தேர்வை நடத்தியது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் என பல்வேறு பதிவிகளின் கீழ் 3935 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

TNPSC Group 4 selection rate:  தமிழ்நாட்டில் குரூப் 4 என்பது மிக முக்கியமான தேர்வாகம். மிகவும் தீவிரத் தன்மை கொண்டது. இத்தேர்வுக்கு மட்டும் சுமார் 13 லட்சத்து 89 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 11 லட்சத்து 48 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். அதாவது. ஒரு பதவிக்கு சுமார் 287 பேர் போட்டி போடுகின்றனர். வெற்றி வாய்ப்பு விகிதம் (Selection Rate) என்பது சற்றேர்குறைய ≈0.35% ஆகும். அதாவது, 1,000 பேரில் குறைந்தது 3.5 பேர் மட்டும் தான் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

எப்போதும் இல்லாதளவு இந்தாண்டு குரூப் 4 மிகக் கடினமான தேர்வுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தமிழ்ப் பாடத்தில் கேட்கப்பட்ட 100 கேள்விகளில், பாதிக்கும் மேற்பட்ட கேள்விகள், பாடத்திட்டத்தில் இல்லாத மிகவும் சிக்கலான கேள்விகளாகக் கேட்கப்பட்டதாக தேர்வர்களுகும், தேர்வு பயிற்றுநர்களும் தெரிவித்திருந்தனர்.

NPSC Group 4 Luck Ratio :  குரூப் 4 தேர்வுக்கான பதவிகள் ஒற்றை நிலைத் தேர்வு அடிப்படையில் பணி நியமனங்கள் நடைபெறுகிறது . தேர்வர்கள் கட்டாயமாக 200 கேள்விகளுக்கும் பதிலளித்திருக்க வேண்டும். தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் கிடையாது. எனவே, இந்த இடத்தில் 'லக்' என்பது முக்கிய பங்கு வகிக்கிறது.

உதாரணமாக, சில தேர்வர்கள் குறைந்தபட்சம் 150 -160 கேள்விகளுக்கு சரியான பதில் கண்டறிந்து, இதர வினாக்களுக்கு மட்டும் உத்தேசமாக பதில் அளித்திருப்பர் . மறுமுனையில், உள்ள சில தேர்வர்கள் அதிகபட்சமாக 50 -60 வினாக்களுக்கு மட்டுமே கையில் பதிலை வைத்துக் கொண்டு, இதர அனைத்து வினாக்களுக்குமே உத்தேசத்தின் அடிப்படையிலும், கேள்வி வரிசை எண்கள் ( தெரியாத பதில்களுக்கு எல்லாம் 'b' வாய்ப்பை தேர்ந்தெடுப்பது) அடிப்படையிலும் பதில் அளித்திருப்பர். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் 'லக்' எந்தளவுக்கு முக்கியமானது என்பது பெரும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது. ஏனெனில், 50 மதிப்பெண்கள் வாங்கும் தேர்வர்களுக்கும் , 170 மதிப்பெண்கள் வாங்கும் தேர்வர்களுக்கு இடையிலான திறன் வேறுபாட்டை தேர்வு மூலம் கண்டறியலாம். ஆனால், 170 மதிப்பெண்கள் வாங்கும் தேர்வர்களுக்கு, 170.01 வாங்கும் தேர்வர்களுக்கு இடையிலான வேறுபாட்டை எழுத்துத் தேர்வின் மூலம் கண்டறிவது மிகக் கடினம். உண்மையில் சொல்ல வேண்டும், இவர்களில் யார் திறமையானவர்கள் என்பதை எழுத்துத் தேர்வின் மூலம் மட்டுமே கண்டறிய முடியாது. இங்கு, தான் 'லக்' தனக்கான களத்தை அமைக்கிறது.

ஹாவார்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற Kunal Mangal, சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் குறித்த தனது ஆய்வறிக்கையை வெளியிட்டார். இன்றைய தனியார்மய, உலகமய காலத்திலும் பெரும்பாலான இளைஞர்கள்களின் ஏன் அரசு வேலைவாய்ப்புகளை நோக்கி செல்கின்றன? அவர்களை தூண்டும் காரணிகள் என்ன? போட்டித் தேர்வுகள் மூலம் தகுந்த நபர்களை கண்டறிய முடியுமா? 'லக்' ஏந்தளவு வேலை செய்கிறது? இளைஞர்கள் மேனிலை நோக்கி நகர இந்த போட்டித் தேர்வுகள் தடையாக இருக்கிறதா? டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளின் எதிர்காலம் என்ன? உள்ளிட்ட கேள்விகளை அடிப்படையாகக் கொண்டு தனது ஆய்வை மேற்கொண்டார்.

இவர் தனது ஆய்வில், குரூப் 4 தேர்வுகளில், தேர்வர்களிடையே ஏற்படும் மதிப்பெண் (Score variation) வேறுபாடுகளில் 'லக்' பங்களிப்பை இல்லாமல் விவரிக்க முடியாது என்கிறார். உதாரணமாக, 2013ல் நடந்த குரூப் 4 தேர்வில், மதிப்பெண் வேறுபாடுகளில் 'லக்'-ன் பங்களிப்பு 12% ஆகவும், 2017 தேர்வில் இந்த எண்ணிக்கை 9.5 ஆகவும், 2019 குரூப் 4 தேர்வில் இந்த எண்ணிக்கை 7% ஆகவும் குறைந்ததாகவும் இவர் தெரிவிக்கிறார்.

மேலும், இந்த 'லக்' அனைத்து தேர்வர்களுக்கு ஒரே சீராக அமைவதில்லை என்றும் விளக்குகிறார். உதாரணமாக, 2019ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வில், மொத்த கட் ஆஃப் மதிப்பெண்ணில், 95 விழுக்காடு ( 95th percentile) மதிப்பெண் தொகுப்புகளை உள்ள தேர்வர்களுக்கு இடையே ஏற்பட்ட மதிப்பெண் வேறுபாடுகள் மொத்தமும் 'லக்'கின் காரணமாக அமைந்திருக்கின்றது. மறுபுறம், 50- 60 விழுக்காடு மதிப்பெண் தொகுப்புகளை உள்ள தேர்வர்களுக்கு ஏற்பட்ட மதிப்பெண் வேறுபாடுகளால் 'லக்' ன் பங்களிப்பு வெறும் பூஜ்யமாக உள்ளது.

எனவே, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளில் லக் என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், இந்த லக்-ன் செயல்பாடுகள் அனைவருக்கும் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. ஏற்கனவே, தேர்வுக்கு நன்கு தயாராகி, 99% கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்கும் தேர்வர்களுக்கே லக்-ன் தாக்கம் காணப்படுகிறது. இவர்களில் சிலர் வெற்றி பெறுவதும், தோல்வி அடைவதும் லக்-ன் மூலம் மட்டுமே தீர்மானிக்கப்படுவதாக தெரிவிக்கிறார். எனவே, இந்த முறை உங்கள் மதிப்பெண் 160- 170ஐத் தாண்டினால் உங்களுக்கும் அதிர்ஷ்டம் கிட்ட வாய்ப்பிருக்கிறது.

இருப்பினும், எந்தவித உழைப்பை செலுத்தாமல், தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டோம் என்று தேர்வெழுதும் தேர்வர்களுக்கு இது சாத்தியப்படுவதில்லை. சுருங்கச் சொன்னால், போட்டித் தேர்வெழுதிய 15 லட்சம் பேரில்,குறைந்தது 10- 20 ஆயிரம் தேர்வர்கள் மட்டுமே அதிர்ஷ்டத்தை நம்பி இருக்க வேண்டும். இவர்கள், லக்-ன் புரியாத புதிரை அனுபவிக்க காத்திருக்கின்றனர். 

No comments