வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செஞ்சும்.. ஒன்றரை மாதத்திற்கும் மேலாக.. ரீபண்ட் வரலையா? என்ன ஆச்சு?
நாடு முழுவதும் உள்ள தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் தாக்கல் செய்த
வருமான வரி ரிட்டர்ன்களுக்கு இன்னும் ரீபண்ட் கிடைக்கவில்லை என்று
கூறப்படுகிறது. தாக்கல் செய்து 1 மாதங்களுக்கும் மேலாக வருமான வரி
ரிட்டர்ன்களுக்கு இன்னும் ரீபண்ட் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
பல ஆயிரம் பேர் வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்து refund
கிடைக்கும் என்று காத்து வருகின்றனர். ஆனால் இன்னும் அவர்களுக்கு
கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. வருமான வரித்துறை தீவிரமாக கண்காணித்து
வருகிறது. வருமான வரி ரிட்டர்ன்களை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே
ரீஃபண்ட் வழங்கப்படும் என வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வருமான வரித்துறை ரீபண்ட்
பொதுவாக, ரீஃபண்ட் வழங்கப்பட்ட பிறகே விளக்கம் கேட்டு நோட்டீஸ்
அனுப்பப்படும். சில சமயங்களில் ஒரு வருடத்திற்குப் பிறகும் மின்னஞ்சல்
வழியாக விளக்கம் கேட்கப்படும். ஆனால் இனி, சந்தேகங்கள் முழுமையாகத்
தீர்க்கப்பட்ட பின்னரே ரீஃபண்ட் வழங்கப்படும் என வருமான வரித்துறை
அறிவித்துள்ளது.
வருமான வரித் துறை வட்டாரங்களின் தகவல்படி, வருமான வரிச் சட்டம், 1961
பிரிவு 143(2)-இன் கீழ் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஏற்கனவே ஒரு
லட்சத்திற்கும் அதிகமான நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. தாக்கல்
செய்யப்பட்ட வருமான வரி கணக்குகளை விரிவாக மதிப்பீடு செய்து சரிபார்க்கும்
நடைமுறையை இந்த நோட்டீஸ்கள் தொடங்குகின்றன.
வருமான வரி தாக்கல்
முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஆய்வுக்கு
எடுத்துக்கொள்ளப்படும் வழக்குகளின் எண்ணிக்கை மூன்று முதல் நான்கு மடங்கு
அதிகமாகும். 2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான சுமார் 1.65 லட்சம் ரிட்டர்ன்களை
தீவிரமாக ஆய்வு செய்ய வருமான வரித் துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான
நோட்டீஸ்கள் அனுப்புவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 15 ஆகும். 2024-25
நிதியாண்டில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக் கணக்குகளை ஆய்வு
செய்வதற்கான அறிவிப்புகள் செப்டம்பர் 15-க்குள் அனுப்பப்பட வேண்டும்.
இந்த ஆண்டு நோட்டீஸ்களை அனுப்புவதற்கான முக்கிய காரணங்களாக அசாதாரணமான
பண டெபாசிட்கள், விளக்கமளிக்கப்படாத அதிகப்படியான வங்கி வரவுகள், பொய்யான
ஆதாரங்கள் மூலம் செய்யப்பட்ட முதலீடுகள், ஜிஎஸ்டி தரவுகளுடன் ஒப்பிடும்போது
ஏற்படும் விற்பனை முரண்பாடுகள் மற்றும் இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல்
தொடர்பான முரண்பாடுகள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன.
வருமான வரித்துறை ITR
CASS (Computer Assisted Scrutiny Selection) என்பது வருமான வரித் துறையால்
பயன்படுத்தப்படும் ஒரு தரவு சார்ந்த, ஆபத்து அடிப்படையிலான அமைப்பு ஆகும்.
இது வருமான வரிக் கணக்குகளை ஆய்வு செய்வதற்காக செயல்படுகிறது. முன்னரே
வரையறுக்கப்பட்ட ஆபத்து காரணிகள் மற்றும் தெரிவிக்கப்பட்டுள்ள வருமானம்,
செலவு அல்லது பரிவர்த்தனைகளில் உள்ள முரண்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில்
இந்த அமைப்பு வழக்குகளைத் தேர்ந்தெடுக்கிறது.
இதன் மூலம் நாடு முழுவதும் கண்காணிக்கப்படும் வழக்குகளின் மொத்த எண்ணிக்கை
2.5 முதல் 3 லட்சமாக உயர்ந்துள்ளது. 2022, 2023 மற்றும் 2024
நிதியாண்டுகளில் ஆண்டுதோறும் சராசரியாக 50,000 முதல் 60,000 வரையிலான
வழக்குகளே ஆய்வு செய்யப்பட்டன. ஆனால், 2025 மதிப்பீட்டு ஆண்டில்
மேம்படுத்தப்பட்ட தரவு பகுப்பாய்வு, கடுமையான விதிமுறைகள் மற்றும் நிதி
தரவுத்தளங்களின் ஒருங்கிணைப்பு காரணமாக இந்த எண்ணிக்கை மிகப்பெரிய அளவில்
உயர்ந்துள்ளது.
கிரிப்டோகரன்சி - வருமான வரி
வருமான வரி செலுத்தும் போது கிரிப்டோகரன்சி மூலம் கிடைக்கும் வருமானத்தை
மறைத்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும். கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள்
வெளிப்படையானவை என்பதால், வருமானத்தை மறைப்பது கண்டுபிடிக்கப்பட்டால்
அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும்.
இவ்வாறு நாடு முழுக்க தனியார், அரசு ஊழியர்களால் தாக்கல் செய்யப்பட்ட
வருமான வரி ரிட்டர்ன்கள் வருமான வரித் துறையின் தீவிர கண்காணிப்பில் உள்ளன.
வருமான வரித் துறையானது பல்வேறு முறைகேடுகளைக் கண்டறிந்து, வரி ஏய்ப்பு
செய்பவர்களைக் கண்காணித்து வருகிறது. இதன் மூலம் சரியான முறையில் வருமான
வரி செலுத்துவதை உறுதி செய்ய முடியும்.
No comments