Breaking News

8வது ஊதியக்குழு: அகவிலைப்படி இணைப்பு விதிகளில் மாற்றம், ஊதிய உயர்வு பாதிக்கப்படுமா?

 


ஜூலை 2025 -க்கான அகவிலைப்படி 3% அதிகரித்து மொத்த அக்விலைப்படி 58% ஆக உயரும் என நம்ப்பபடுகின்றது. ஜனவரியில் இது 2% அல்லது 3% அதிகரித்தால், மொத்த அகவிலைப்படி 60% அல்லது 61% ஆக அதிகரிக்கும். ஆனால், அரசாங்கம் 60-61% அகவிலைப்படியையும் அடிப்படை ஊதியத்துடன் இணைக்காமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான காரணத்தை இங்கே அறியலாம்.

8வது ஊதியக்குழுவில் சில முக்கிய விஷயங்கள் பலரது கவனத்தை கவர்ந்துள்ளன. ஃபிட்மெண்ட் ஃபாக்டர் மற்றும் அகவிலைப்படி இணைப்பு ஆகியவை இவற்றில் முக்கியமானவையாக உள்ளன. ஃபிட்மெண்ட் ஃபாக்டர் புதிய அடிப்படை ஊதிய கணக்கில் முக்கிய காரணியாக இருக்கும். 

அகவிலைப்படி இணைப்பை பொறுத்தவரை, 8வது ஊதியக் குழு ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் என்றும், அந்த தேதி வரையிலான அகவிலைப்படி (DA) அடிப்படை ஊதியத்தில் சேர்க்கப்படும் என்றும் பெரும்பாலான மக்கள் நம்பினர். அதன் பிறகு, அந்த அடிப்படை ஊதியம் புதிய ஃபிட்மென்ட் ஃபாக்டரால் பெருக்கப்பட்டு புதிய அடிப்படை சம்பளம் தீர்மானிக்கப்படும் என கணிக்கபட்டது. 

எனினும், தற்போது, இந்த விஷயத்தில் ஒரு பெரிய மாற்றம் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது ஜூலை 2025 -க்கான அகவிலைப்படி 3% அதிகரித்து மொத்த அக்விலைப்படி 58% ஆக உயரும் என கிட்டத்தட்ட தெளிவாகிவிட்டது. ஜனவரியில் இது 2% அல்லது 3% அதிகரித்தால், மொத்த அகவிலைப்படி 60% அல்லது 61% ஆக அதிகரிக்கும்.

ஆனால், அரசாங்கம் 60-61% அகவிலைப்படியையும் அடிப்படை ஊதியத்துடன் இணைக்காமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 50% DA மட்டுமே அடிப்படை ஊதியத்தில் இணைக்கபடக்கூடும் என நிபுணர்களும் கருதுகிறார்கள். அப்படி நடந்தால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தின் முழு கணக்கீடும் மாறும். இந்த மாற்றம் ஏன் பரிசீலிக்கப்படுகிறது? இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம். 

அகவிலைப்படி 50% -ஐ எட்டும்போது அது அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்ற ஒரு விதி உள்ளது. ஜனவரி 2024 இல் அகவிலைப்படி 50% ஐ எட்டியது, ஆனால் அரசாங்கம் அப்போது அதை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கவில்லை. 8வது சம்பளக் குழுவிற்காக இது நிலுவையில் வைக்கப்பட்டதாக நிபுணர்கள் நம்புகின்றனர். அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கபடாததற்கான முக்கிய காரணம் நிதிக் கட்டுப்பாடு. 

தற்போது 61% அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்பட்டால், அடிப்படை சம்பளம் பெரிய அளவில் அதிகரிக்கும். மேலும் HRA மற்றும் TA போன்ற கொடுப்பனவுகளும் அதிகரிக்கும். இது அரசாங்கத்திற்கு பெரும் சுமையை ஏற்படுத்தும். 50% அகவிலைப்படியை மட்டும் இணைப்பதன் மூலம், இந்தச் சுமையை ஓரளவிற்கு கட்டுப்படுத்தலாம். 

அகவிலைப்படி கணக்கீட்டிற்கான அடிப்படை ஆண்டில் ஏற்படவுள்ள மாற்றம் மற்றொரு காரணமாகும். இது 2016 -இலிருந்து 2026 ஆக மாறக்கூடும். இது நடந்தால், DA மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கும். இது அரசாங்கத்திற்கு 50% DA மட்டும் இணைப்பதை எளிதாக்கும். அடிப்படை ஆண்டை மாற்றுவது அனைத்து செயல்முறையையும் ரீசெட் செய்வது போன்றது. ஏனெனில் கடந்த 10 ஆண்டுகளில் செலவுகள் மற்றும் பணவீக்க அளவுகள் மாறியுள்ளன. 

ஜனவரி 1, 2026 க்குள், அகவிலைப்படி சுமார் 60-61% ஆக அதிகரிக்கும். ஆனால் 50% அகவிலைப்படி மட்டுமே இணைக்கப்படலாம். அதன் பிறகு, அகவிலைப்படி மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கும். மேலும் புதிய அகவிலைப்படி புதிய அடிப்படை சம்பளத்தில் கணக்கிடப்படும். இது ஊழியர்களுக்கு இன்னும் அதிக பயனளிக்கும். ஏனெனில் புதிய அகவிலைப்படி புதிய மற்றும் அதிகமான அடிப்படை சம்பளத்தில் கணக்கிடப்படும். அதாவது ஊதியத்தில் விரைவான வளர்ச்சி இருக்கும்.

8வது சம்பளக் குழு ஜனவரி 1, 2026 முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இன்னும் குழுவே அமைக்கப்படவில்லை. இந்தக் குழு 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் அமைக்கப்படலாம். இது தனது அறிக்கையை சமர்ப்பித்து அரசாங்க ஒப்புதல் கிடைத்து 8வது ஊதியக்குழு இறுதியாக 2026 ஆம் ஆண்டு மத்தியில் அல்லது 2027 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

No comments