Home Loan : ஹோம் லோன் EMI தொகையை குறைக்க ஈசியான 2 டிப்ஸ்... இப்புடி செஞ்சு பாருங்க
வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் குறையும் போது உங்களுடைய மாத தவணையை குறைக்க வேண்டுமா அல்லது கடனை திருப்பி செலுத்தும் கால அவகாசத்தை குறைக்க வேண்டுமா என்ற குழப்பம் ஏற்படலாம்.ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரையிலான ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் ரெப்போ விகிதம் குறித்த நிலையை பற்றி பேசும்போது இதுவரை இந்த வருடத்தில் மட்டும் 100 பேசிஸ் புள்ளிகள் குறிக்கப்பட்டுள்ளது. வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு இது ஒரு பெரிய நிவாரணமாக இருந்தாலும், இன்னும் பலர் தங்களுடைய மாதத் தவணைத் தொகையை குறைப்பதற்கான வழிகளை தேடி வருகின்றனர். அப்படி பலர் கேட்கக்கூடிய ஒரு முக்கியமான கேள்வி என்னவென்றால், தற்போதைய கடன் வழங்குனருடனே தொடர்ந்து நீடிக்க வேண்டுமா அல்லது சிறந்த வீட்டுக் கடன் விகிதம் வழங்கும் வேறு ஒரு கடன் வழங்குனரை நாட வேண்டுமா என்பது தான்.
இதற்கான முதல் படி என்பது ஏற்கனவே நீங்கள் அக்கவுண்ட் வைத்திருக்கும் கடன் வழங்குனரிடம் குறைவான வட்டி விகிதத்திற்கு பேரம் பேசுவது. இதனை நீங்கள் செய்யும் போது குறைந்தபட்ச ஆவணங்கள் தேவைப்படுவதோடு, விரைவான பிராசசிங் மற்றும் சொத்துக்கான மறு மதிப்பீடு செய்ய தேவை இருக்காது. ஆனால் இந்த மாற்றத்திற்கு பொதுவாக கடன் வழங்குனர்கள் நிலுவையில் உள்ள கடன் தொகையில் 0.25 சதவீதம் முதல் 0.5 வசூல் செய்கின்றனர் அல்லது வேறு சில வங்கிகள் இதற்கென பொதுவான ஒரு பிராசசிங் கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளனர்.இரண்டாவது ஆப்ஷன் என்பது மறுக்கடன் வாங்குவது அல்லது குறைந்த வட்டி விகிதம் கொடுக்கும் புதிய கடன் வழங்குனருக்கு கடன் பேலன்ஸை முழுவதுமாக டிரான்ஸ்ஃபர் செய்வது. இது உங்களுக்கு பெரிய அளவில் பணத்தை சேமித்து கொடுக்கும். ஆனால் இதில் உங்களுடைய முயற்சி அதிகம் தேவை. புதிதாக ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும், சட்ட ரீதியான மற்றும் தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட ஆவணங்கள், சொத்து மதிப்பீடு மற்றும் கூடுதல் கட்டணங்களை நீங்கள் ஏற்க வேண்டும்.ஏற்கனவே நீங்கள் கடன் வாங்கி இருக்கும் வங்கி நியாயமான மாற்று கட்டணத்தோடு வட்டி விகிதத்தை குறைத்து தருவதற்கு ஒப்புக்கொண்டால் அந்த வங்கியிலேயே தொடர்ந்து உங்களுடைய கடனை செலுத்துவது புத்திசாலித்தனமாக இருக்கும். அதிலும் குறிப்பாக நீங்கள் கடன் வாங்கி பல வருடங்கள் ஆகி இருந்தால், உங்களுடைய EMI தொகையாக அசலை செலுத்தி வருவீர்கள். இதன் போது இந்த ஆப்ஷனை நீங்கள் தேர்வு செய்யலாம். பேரம் பேசிய பிறகு வழங்கப்படும் வட்டி விகிதம் உங்களுக்கு திருப்தி தரும் வகையில் இருந்தால் குறைந்தபட்ச ஆவணங்களோடு அங்கேயே உங்களுடைய கடனை தொடரலாம்.மறுபுறம் 0.75% அல்லது அதற்கும் அதிகமான பெரிய அளவிலான வட்டி விகித வேறுபாடு இருக்கும் பட்சத்தில், புதிய கடன் வழங்குனரை தாராளமாக நீங்கள் நாடலாம். கடன் வாங்கிய முதல் சில வருடங்களில் உங்களுடைய பெரும்பாலான EMI தொகை வட்டியாக கருதப்படுகிறது. இதனால் வட்டி விகிதம் குறையும் போது உங்களுடைய கடன் தொகையில் பல லட்சங்களை சேமிக்கலாம். அதாவது தற்போதைய கடன் வழங்குனரோடு ஒப்பிடும்போது வேறு கடன் வழங்குனரை நாடி அதன் மூலமாக வரும் இறுதி கணக்கீடு 15 முதல் 20 சதவீதம் அதிக லாபத்தை தரும் பட்சத்தில் நீங்கள் புதிய கடன் வழங்குநரை தேர்வு செய்யலாம்.ட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் குறையும் போது உங்களுடைய மாத தவணையை குறைக்க வேண்டுமா அல்லது கடனை திருப்பி செலுத்தும் கால அவகாசத்தை குறைக்க வேண்டுமா என்ற குழப்பம் ஏற்படலாம். EMI ஐ குறைப்பது உங்களுடைய மாத சுமையை குறைக்கலாம். உதாரணமாக குழந்தைகளுக்கான பள்ளி செலவு அல்லது வேறு ஒரு கடனை செலுத்துவது போன்றவற்றிற்கு உதவியாக இருக்கும்.
No comments