Breaking News

மழைக் காலத்தில் பைக் பராமரிப்பு முக்கியம்.. இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க


ந்தியாவின் பல பகுதிகளிலும் இது கடுமையான மழை காலமாகும். மழைகாலம் வந்துவிட்டால் நம் பைக்குகளுக்கும் பல பிரச்னைகள் தானாக வர ஆரம்பித்துவிடும்.
நம் பைக்குகளை சரியாக, முறையாக பராமரித்தாலே எவ்வுளவு கடினமாக குளிர் காலத்திலும் எளிதாக எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ஓட்டிச் செல்லலாம். கார்கள் போலவே பைக்குகளின் பாதுகாப்பும் செயல்திறனும் கூட குளிர் காலத்தில் பாதிப்படையக் கூடும். இந்தக் குளிர்காலத்தில் நம் பைக்குகளை நல்ல நிலையில் வைத்திருக்க, மிக முக்கியமான அதே சமயத்தில் சில எளிய டிப்ஸ்களை நாம் பின்பற்றியாக வேண்டும்.

பேட்டரி ஆயுள்

மழை காலத்தில் உங்கள் பைக்கின் பேட்டரி தான் முதல் பாதிப்புக்குள்ளாகும். ஏனென்றால் இந்த சமயத்தில் ஹெட் லைட் போன்ற பல மின் சாதனங்களை அதிகமாக பயன்படுத்துவோம். அதோடு இஞ்சின் ஆயிலும் அடர்த்தியாகிவிடும். இதன் காரணமாக பேட்டரியில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. ஆகவே உங்கள் பைக் பேட்டரியை அடிக்கடி செக் செய்து கொள்ளுங்கள். அதன் வால்டேஜ், க்ரீஸ் டெர்மினல் போன்றவை இறுக்கமாக மூடப்பட்டுள்ளதா, அழுக்கில்லாமல் உள்ளதா என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். விரைவாக பேட்டரி தீர்கிறது என்றால் புதியதை பொறுத்துங்கள்.

டயரை பரிசோதிக்கவும்

எந்த வாகனத்திலும் நாம் டயரின் பாதுகாப்பை பெரிதாக கண்டு கொள்வதில்லை. வெயில் காலத்தை விட மழை காலத்தில் டயர்கள் அதிக பாதிப்படையும். ஆகையால் அடிக்கடி டயரில் சேதம் ஏற்பட்டுள்ளதா, காற்றழுத்தம் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். வெப்பநிலையில் ஒவ்வொரு 10 டிகிரி குறையும் போதும் டயரின் காற்றழுத்தம் 2 புள்ளிகள் குறையும். அதிக பணி பெய்யும் பிரதேசங்களில் நீங்கள் வசித்தீர்கள் என்றால், வழக்கமான டயர்களுக்கு மாற்றாக குளிர்காலத்திற்கு ஏற்ற டயர்களை வாங்கி மாட்டுங்கள்.

தரமான ஏர் கூலண்ட் பயன்படுத்துங்கள்

உங்கள் பைக்கில் ஸ்டாண்டர்ட் கூலிங் சிஸ்டம் இருந்தால், அதற்குப் பதிலாக உயர் தரமுள்ள கூலண்டை பயன்படுத்துங்கள். கூலண்டிற்கு பதிலாக ஒருபோதும் தண்ணீரைப் பயன்படுத்தாதீர்கள். அதேப்போல் குளிர் காலத்தில் antifreeze அளவை அடிக்கடி பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

நல்ல லூப்ரிகேஷன் (எண்ணெய் இட வேண்டும்)

பைக்கில் எப்போதும் செயல்படக் கூடிய பகுதிகள் மற்றும் செயின்களில் அடிக்கடி எண்ணெய் இட வேண்டும். ஈரமான சாலையில் செல்லும் போது செயின் துருப்பிடிக்க வாய்ப்புள்ளது. ஆகையால் அடிக்கடி அதை சுத்தப்படுத்தி எண்ணெய் இடுங்கள். பிரேக், பெடல், ஆக்ஸிலேட்டர் போன்ற பகுதிகளில் அழுக்கு, ஈரம், ஆயில், உப்பு போன்றவை சேகரமாகிவிடும் வாய்ப்புள்ளது. ஆகவே இந்தப் பகுதிகள் அனைத்திலும் நன்றாக லூப்ரிகேஷன் செய்யுங்கள்.

இஞ்சின் ஆயில் மற்றும் ஃபில்டரை மாற்றுங்கள்

குளிர்காலத்தில் காலை நேரத்தில் பைக்கை ஸ்டார்ட் செய்வது கடினமான வேலை. இந்தப் பிரச்சனையை தடுக்க வேண்டுமென்றால் தரமான இஞ்சின் ஆயிலை பயன்படுத்துங்கள். எப்போதும் குளிர் காலத்திற்கு முன்பே இஞ்சின் ஆயில் மற்றும் ஃபில்டரை மாற்றிவிடுங்கள்.

No comments