Breaking News

ஆதார் கார்டு மிஸ் ஆகிடுச்சா? புது ஆதார் வாங்க இத செய்தாலே போதும்!


தார் என்ற தனித்துவமான 12 இலக்க அடையாள எண் (UID) இந்தியாவில் வசிப்போருக்கும் மற்றும் NRI-களுக்கும் யுனிக் ஐடென்டிஃபிகேஷன் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (UIDAI) மூலமாக வழங்கப்படுகிறது.
நீங்கள் உங்கள் கையில் வைத்திருக்கக்கூடிய ஆதார் கார்டை தொலைத்து விட்டாலோ அல்லது ஆதார் எண்ணை மறந்து விட்டாலோ அதனை நீங்கள் UIDAI இன் இலவச எண்ணான 1947 அல்லது ஆன்லைனில் உள்ள அதிகாரப்பூர்வ போர்ட்டலில் புகார் அளிக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களது ஆதார் எண் தவறாக பயன்படுத்துவதை நீங்கள் தவிர்க்கலாம்.

மேலும் உங்களது ஆதார் எண்ணை அதிகாரப்பூர்வமற்ற நபர்கள் அல்லது நிறுவனங்களுடன் ஒருபோதும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். பப்ளிக் கம்ப்யூட்டர் அல்லது கிளவுட் ஸ்டோரேஜ் போன்ற பாதுகாப்பற்ற இடங்களில் உங்களது ஆதார் எண்ணை சேமித்து வைக்காதீர்கள்.

UIDAI போர்ட்டலில் கிடைக்கும் தகவலின் அடிப்படையில், உங்களது ஆதார் அட்டையை நீங்கள் தொலைத்து விட்டாலோ அல்லது தவறுதலாக வேறு ஏதேனும் இடத்தில் வைத்துவிட்டாலோ அதனை மீட்டெடுப்பதற்கு அல்லது புதிய ஒன்றை வாங்குவதற்கு ஏராளமான வழிகள் உள்ளன.

அவ்வாறு உங்களுக்கு கிடைக்கக்கூடிய ஆப்ஷன்கள் சில:

  1. ஒரு நபர் தனது ஆதார் எண்ணை ஆதார் சேவை மூலமாக கண்டுபிடிக்கலாம் - தொலைந்து போன UID/EID ஐ https://myaadhaar.uidai.gov.in/ என்ற வெப்சைட்டில் மீட்டெடுக்கலாம்.

  2. 1947 என்ற எண்ணுக்கு போன் செய்யும்பொழுது அதில் உள்ள காண்டாக்ட் சென்ட்டர் ஏஜென்ட் உங்களின் EID நம்பரை பெறுவதற்கு உதவி செய்வார்.

  3. இந்த EID பயன்படுத்தி ரெசிடென்ட் போர்ட்டலில் இருந்து eAadhaar ஐ டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

  4. 1947 என்ற எண்ணுக்கு அழைத்து IVRS சிஸ்டத்தில் இருக்கக்கூடிய EID நம்பர் மூலமாக ஆதார் நம்பரை பெறலாம்.

  5. ஒருவேளை உங்களது மொபைல் நம்பர் ஆதாருடன் பதிவு செய்யப்பட்டிருந்தால், உங்களது EID அல்லது ஆதாரை கண்டுபிடிக்க ரிட்ரீவ் EID/UID இல் உள்ள 'மை ஆதார்' டேபிற்கு செல்க. அங்கு 'கெட் ஆதார்' பிரிவின் கீழ் காணப்படும் "ரிட்ரீவ் லாஸ்ட் ஆர் ஃபர்காட்டன் UID/EID" கிளிக் செய்ய வேண்டும்.

  6. நீங்கள் மீட்டெடுக்க நினைக்கும் EID/UID தேர்வு செய்து, பின்னர் உங்களது பெயர் மற்றும் மொபைல் நம்பர் அல்லது இமெயில் IDயை என்டர் செய்யவும் (ஆதார் எண்ணுடன் பதிவு செய்யப்பட்டது).

  7. இப்போது உங்களது EID/ ஆதார் நம்பரை உங்களது மொபைல் நம்பர் அல்லது இமெயில் IDயில் பெறுவீர்கள்.

  8. EID ஐ தொலைத்துவிட்ட நபர்கள் அவர்களது EID ஐ 1947 என்ற எண்ணை அழைப்பதன் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

  9. CRM ஆப்பரேட்டர்கள் உங்களிடம் இருந்து அடிப்படையான சில இருப்பிட விவரங்களை பெற்றுக் கொள்வார்கள். அந்த விவரங்கள் அவர்கள் வைத்திருக்கக்கூடிய டேட்டா பேஸ் உடன் பொருந்தும் பட்சத்தில் ஆபரேட்டர் உங்களுக்கு உரிய EID ஐ வழங்குவார்.

  10. EID பெற்ற பிறகு நீங்கள் மீண்டும் 1947 என்ற எண்ணை அழைத்து EID ஐ வழங்கி IVRS மூலமாக ஆதாரை பெற்றுக் கொள்ளலாம். எனினும் நீங்கள் சரியான இருப்பிட விவரங்களை வழங்கவிட்டால் உங்கள் EID தொடர்பான தகவல்களை உங்களால் பெற முடியாது.

  11. மேலும் அருகில் உள்ள ஆதார் மையத்தை அணுகி EID மற்றும் மொபைல் நம்பர் வழங்கி இ-ஆதாரின் ஒரு காப்பியை பெற்றுக் கொள்ளலாம்.

No comments