தற்காப்புக் கலைப்பயிற்சி வழங்கப்பட வேண்டிய பள்ளிகளின் எண்ணிக்கை மற்றும் நிதி ஒதுக்கீட்டு விவரம் மாவட்ட வாரியாக வெளியீடு.
2023-24 ஆம் ஆண்டிற்கான தற்காப்புக்கலைப் பயிற்சி வழங்குதல் · தற்காப்புக்கலைப் பயிற்சி சார்ந்து வழிகாட்டுதல் நெறிமுறைகள் வழங்குதல் மாவட்டங்களுக்கு நிதி விடுவித்தல் - மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்
SPD Proceedings - Download here
ஒருங்கிணைந்தப் பள்ளிக் கல்வியின் கீழ் 6941 அரசு நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியர்களுக்கு தற்காப்புக் கலை பயிற்சியளிக்க ஒவ்வொரு பள்ளிக்கும் மாதம் ரூ .5000 / - ( பயிற்சியாளர்களுக்கான ஊதியம் . மாணவர்களுக்கான சிற்றுண்டி செலவினம் ) 3 மாதங்களுக்கு ரூ .15,000 ஆக மொத்தம் ரூ .1041,150 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் 6267 உயர் மேல் நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவியர்களுக்கு பயிற்சியளிக்க மாதம் ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ .5000 / - ( பயிற்சியாளர்களுக்கான ஊதியம் . மாணவர்களுக்கான சிற்றுண்டி செலவினம் ) 3 மாதங்களுக்கு 15,000 ஆக மொத்தம் ரூ .940.050 / -இலட்சம் என அனுமதித்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி மாணவிகள் எந்த ஒரு சூழலையும் பக்குவமாக எதிர்கொள்ளும் ஆற்றல் மற்றும் திறனை வளர்க்கும் வகையிலும் , இடைநிற்றலை தவிர்த்து இடைநிலை மற்றும் மேல்நிலை கல்வியை தொடர்வதற்கு ஏற்ப Karate , Judo , Taekwondo , Silambam ஆகிய தற்காப்பு கலைப்பயிற்சிகள் மாணவிகளுக்கு தன்னம்பிக்கையை அளிக்கிறது . இப்பயிற்சி மாணவிகளுக்கு தன்னம்பிக்கை தருவதால் , பாதுகாப்பிற்கு ஏற்புடையதாக அமைகின்றது.
மாவட்டங்களில் தற்காப்புக் கலைப்பயிற்சி வழங்கப்பட வேண்டிய பள்ளிகளின் எண்ணிக்கை மற்றும் நிதி ஒதுக்கீட்டு விவரம் மாவட்ட வாரியாக கீழ்க்காணுமாறு வழங்கப்பட்டுள்ளது ( Elementary and Secondary )
No comments