Breaking News

School Morning Prayer Activities - 23.11.2023

 


 திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : வெகுளாமை

குறள்:304

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்

பகையும் உளவோ பிற.

விளக்கம்:

முகத்தில் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ?.

பழமொழி :

Good beginning makes a good ending

நல்ல தொடக்கம் நல்ல முடிவைத் தரும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1) என் உடன் பயிலும் மாணவ,மாணவிகளுடன் எந்த வேறுபாடும் இன்றி அன்போடு பழகுவேன்.

2) பிற மாணவர்கள் வைத்து இருக்கும் பொருள்கள் மீது ஆசை படவோ அவற்றை எடுத்துக்கொள்ளவோ மாட்டேன்.

பொன்மொழி :

வாழ்வில் நீ

வெற்றி பெறும் போதெல்லாம்

உன் முதல் தோல்வி

நினைவுக்கு வந்தால்

உன்னை யாராலும்

வெல்ல முடியாது.

பொது அறிவு :

1. இந்தியாவின் பழமையான பொது அஞ்சல் அலுவலகம் எங்கு அமைந்துள்ளது?

விடை: சென்னை

2. இந்தியாவின் முதல் 5 ஸ்டார் ஹோட்டல் எங்கு தொடங்கப்பட்டது?

விடை:  மும்பை

English words & meanings :

 Aback - surprised ஆச்சரியப்படுதல் abashment - feeling ahy வெட்கப்படுதல்

ஆரோக்ய வாழ்வு :

செம்பருத்தி பூ : செம்பருத்தி பூ குளிர்ச்சி பொருந்தியது. சருமத்திற்கு இதமும், சுகமும் அளித்து ரத்தத்தை சுத்தம் செய்து உடலை பளபளப்பாக்கும்.

நவம்பர் 23 இன்று

கவிஞர் சுரதா அவர்களின் பிறந்தநாள்

சுரதா (Suratha; 23 நவம்பர் 1921 – 29 சூன் 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால்‌ பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.

சர் ஜகதீஷ் சந்திர போஸ் அவர்களின் நினைவுநாள்

சர். ஜெகதீஷ் சந்திரபோஸ்

சர் ஜகதீஷ் சந்திர போஸ் (Jagadish Chandra Bose) (1858-1937) தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர்.[1] போசு வானொலி அறிவியலின் முன்னோடிகளில் ஒருவர் என ஐஇஇஇ அதிகாரப்பூர்வமாக நூறு வருடங்கள் கழித்து அறிவித்தது.[2

நீதிக்கதை

 ஒரு நாள் சுமன் என்ற மாணவன், செக்கிங்கிடம் வேணும்னா டிக்கெட்டுக்கான பணத்தை கொடுத்துடறேன் சார்” என்று கெஞ்சினான் .

“அது ஒத்து வராது தம்பி, 500 ரூபாய் பைன் கட்டு. இல்ல போலீசுக்கிட்ட ஒப்படச்சுடுவோம். என்ன சொல்ற...?

அவன் தலையைக் குனிந்து கொண்டான்.

“எந்த பள்ளிக்கூடத்துல படிக்கிற?”

பள்ளியின் பெயரைச் சொன்னான் சுமன்.

“ஏம்பா, இதைத்தான் பள்ளியில சொல்லி கொடுத்திருக்காங்களா?” செக்கிங் கோபமாகக் கேட்டார்.

அப்போது பஸ்சிலிருந்து இறங்கிய சுமனின் ஆசிரியர் வேகமாக செக்கிங்கை நோக்கி வந்தார்.

“அய்யா வணக்கமுங்க. நான் தமிழ் ஆசிரியர், வகுப்பு ஆசிரியரும் கூட. நாங்க நல்லொழுக்கத்தைத்தான் போதிக்கிறோம். பயணிக்கும் பேருந்தில் பயணச்சீட்டு வாங்க வேண்டாமென்றோ. சாப்பிடும் சிற்றுண்டிக்கு பணம் கொடுக்காதீர்கள் என்றோ போதிப்பதில்லை. உங்களிடம் மாட்டிக்கொண்ட இந்தப் பையன் ஒழுங்கீனமானவன். பள்ளிக்கு பல நாட்கள் கட்அடித்து, தகாத நண்பர்களுடன் ஊர் சுற்றித் திரிபவன். இவனுக்கு நாங்கள் கூறிய புத்திமதிகள் அனைத்தும் கடலில் பெய்த மழை போல வீணாயிற்று. இது ஆசிரியரின் குற்றமோ, பள்ளியின் குற்றமோ இல்லை. இருந்தாலும் இவன் என் மாணவன் என்பதால் இவன் செயலுக்கு வெட்கப்பட்டு, தாங்கள் கேட்கும் அபராதத்தை நானே கட்டி விடுகிறேன்” என்று கூறி தன் பர்சிலிருந்த பணத்தை எடுத்து பரிசோதகரிடம் கொடுத்தார்.

நல்லொழுக்கம் போதிக்கும் ஆசிரியருக்கும், நற்பண்புகள் வளர்க்கும் கல்விக்கூடத்துக்கும் தன்னுடைய செயலால் கெட்ட பெயர் உண்டானதற்காக மனம் வருந்தி அழுது ஆசிரியரின் கால்களில் விழுந்தான் சுமன். அன்று மாலையே தன் பெற்றவர்களிடம் நடந்ததை மறைக்காமல் கூறி அவர்களிடம் தன் செயலுக்காக மன்னிப்பு கேட்டான். அத்துடன் நிற்காமல் தன் தந்தையை விட்டே தமிழ் ஆசிரியர்  அபராதமாகச் செலுத்திய 500 ரூபாய் பணத்தையும் திருப்பிக் கொடுக்கச் செய்தான். இப்போது பஸ்சில் ஏறிய உடனே முதல் ஆளாக டிக்கெட் எடுப்பதுடன், படியில் நின்று பயணிப்பதையும் விட்டு விட்டான் சுமன்.

இன்றைய செய்திகள் - 23.11.2023

*ஐ.என். எஸ் இம்பால் போர் கப்பலின் பரிசோதனை வெற்றி; இந்திய கடற்படை.

*ஆவின் பச்சை நிற பாலுக்கு பதிலாக ஊதா நிற டிலைட் பாலை முன்னிலைப்படுத்தி வருகிறோம்.–

அமைச்சர் மனோ தங்கராஜ்.

*குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. பிப்ரவரி 25ம் தேதி நடைபெற்ற குரூப் 2 பணிகளுக்கான முதன்மை தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்படும்.

*சென்னை: அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.929.37 கோடியில் 230 அடிப்படை வசதி திட்டங்களை செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

*கேரள கிரிக்கெட் அணியின் தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமனம்.

*ஐசிசி ஒருநாள் தரவரிசை; பேட்ஸ்மேன் வரிசையில் 

சுப்மன் கில் தொடர்ந்து முதலிடம்.....விராத் கோலி முன்னேற்றம்!

Today's Headlines

* I.N. S Imphal warship Trial success ;  Indian Navy.

 *Instead of green milk we are highlighting Blue Delight milk.-

 Minister Mano Thangaraj.

 *TNPSC has announced that Group 2 exam results will be published in December.  The results of the main examination for Group 2 posts held on February 25 will be published in December.

 *Chennai: Chief Minister M. K. Stalin has ordered the implementation of 230 basic facilities projects at Rs 929.37 crore under the Amruth 2.0 project.

 *Actress Keerthy Suresh appointed as ambassador of Kerala cricket team.

 *ICC ODI Rankings;  In the batsman's line-up

 Subman Gill continues to top.....Virat Kohli's progress!

Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments