வருமான வரி கட்டிட்டீங்களா? வீட்டில் பணம் இருக்கா? நகை இருக்கா? இந்த அளவுக்கு மேல் வைத்திருக்க கூடாது:
ஒருவர் வீட்டில் எவ்வளவு பணத்தை வைத்திருக்க முடியும் என்பது தெரியுமா? நகைகளை எவ்வளவு வேண்டுமானாலும் வீட்டில் வைத்திருக்கலாமா?
ஆனால், அதற்கான ஆதாரங்களை நீங்கள் நிரூபிக்க தயாராக வேண்டும். மேலும், ஐடிஆர் அறிவிப்பையும் காட்ட வேண்டும். ஒருவேளை இது தவறினால், உங்கள் மீது நடவடிக்கையும் எடுக்கலாம்.
டெபாசிட்: 50,000 ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்யவோ அல்லது எடுக்கவோ வேண்டுமானால், அதற்கு உங்களது பான் விவரங்களை வங்கியில் தரவேண்டும். ஒரு வருடத்தில் வங்கியில் இருந்து ரூ.1 கோடி ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தால், அதற்கு 2 சதவீதம் டிடிஎஸ் செலுத்த வேண்டும்... ஒரு நிதியாண்டில் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்க பரிவர்த்தனை செய்தால், அதற்கு அபராதம் விதிக்கப்படும்..
ரூ.30 லட்சத்துக்கும் அதிகமான சொத்துக்களை வாங்கினாலோ மற்றும் விற்றாலோ அதற்கு விசாரணை நடத்தப்படும். ரூ.2 லட்சத்துக்கு மேல் பணம் கொடுத்து எதையும் வாங்க முடியாது..
கிரெடிட் கார்டு: அதேசமயம் ரொக்கமாக கொடுத்தால் பான் கார்டு, ஆதார் கார்டுகளை காட்ட வேண்டும். கிரெடிட் டெபிட் கார்டு மூலம் ஒரே நேரத்தில் ரூ. 1 லட்சத்துக்கும் அதிகமான பரிவர்த்தனைகளை செய்தால், விசாரணை நடத்தப்படும். ஒரு நாளில் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான தொகையை பிறரிடமிருந்து ரொக்கமாக வாங்கக்கூடாது.. மாறாக, வங்கி மூலம் மட்டுமே வாங்க வேண்டும். அதேபோல, ரூ.20,000 மேல் ரொக்கமாக வேறு யாரிடம் இருந்தும் கடன் வாங்கக்கூடாது.
பணத்தை போலவே, தங்க நகைகளுக்கும் வரைமுறை உள்ளது.. வீட்டில் தங்கம் இருந்தால் செழிப்பாக இருக்கும் என்று இந்திய மக்கள் பலரும் நம்பிக்கை உள்ளது.. அனைத்து வங்கிகளிலுமே லாக்கர் வசதி இருந்தாலும்கூட, வீட்டில் நகை வைத்திருப்பதை பலர் விரும்புவார்கள். பொதுவாக, தங்கம் நாம் வைத்திருப்பதற்கு எந்த தடையும் இல்லைதான்.. ஆனால், தங்கம் வைத்திருப்பதற்கும் சரியான ஆதாரங்களையும், ஆவணங்களையும் நாம் வைத்திருக்க வேண்டும்...
தங்க நகைகள்: அதுவும், ஒரு நபரின் பாலினம் மற்றும் திருமண நிலை ஆகியவற்றின் அடிப்படையில் அந்த நகையை அவர் வைத்திருக்கலாம். திருமணமான பெண் 500 கிராம், அதாவது 62.5 சவரன் தங்கத்தையும், திருமணம் ஆகாத பெண் 250 கிராம், அதாவது, 31.25 சவரன் மதிப்புள்ள தங்கத்தை வைத்துக்கொள்ளலாம்.
திருமணமான மற்றும் திருமணம் ஆகாத என 2 தரப்பு ஆண்களுமே 100 கிராம் எடையுள்ள அதாவது 12.5 சவரன் தங்க ஆபரணங்களையும் எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் வைத்திருக்கலாம். மேற்கூறிய அளவு வைத்திருப்பவரின் தங்கத்தை வருமான வரித்துறையினர் சோதனையிடும்போது பறிமுதல் செய்ய முடியாது...
ஆவணங்கள்: ஒருவேளை தங்கம் வைத்திருப்பதற்கு சரியான ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் வைத்திருக்கும் பட்சத்தில் தங்கம் வைத்திருப்பதற்கு வரம்பு எதுவும் கிடையாது.. ஆனால், வருமான வரித்துறையின் சோதனையின்போது வரி செலுத்துவோரின் நகைகளை பறிமுதல் செய்வதிலிருந்து விடுவிப்பதற்காக மட்டுமே இந்த விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
நீங்கள் தங்கத்தை பரிசாகவோ அல்லது பரம்பரையாகவோ பெற்றிருந்தால், அதற்கான ஆவணத்தை நீங்கள் காட்ட வேண்டும். வருமான வரிக்கணக்கிலும் இதை கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும். ஒரு ஆவணமாக, தங்கத்தைப் பரிசளித்த நபரிடம் இருந்து பெறப்பட்ட ரசீதையும் காட்டலாம்.
No comments