Breaking News

அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்: அகவிலைப்படி உயர்வுடன் 18 மாத அரியர் தொகையும் வருது :

 


புத்தாண்டு தொடங்கியுள்ள நிலையில் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இரண்டு நல்ல செய்திகள் விரைவில் கிடைக்கக்கூடும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

7th Pay Commission Latest News: ஜனவரியில் டிஏ 3% அதிகரித்து 56% ஆனால், மாத அகவிலைபப்டி = ரூ.18,000 x 56% = ரூ.10,080. தற்போதைய அகவிலைபப்டி =  ரூ.18,000 x 53% = ரூ.9,540. வித்தியாசம்: ஒவ்வொரு மாதமும் ரூ.540, ஆண்டுக்கு ரூ.6,480. அதிகபட்ச சம்பளம் ரூ.2,50,000 உள்ள ஊழியர்களுக்கு டிஏ 3% உயர்ந்தால், டிஏ அதிகரிப்பு ரூ.7,500 ஆக இருக்கும். இந்த உயர்வு தொழிலாளர்களுக்கு நிதி உதவி மற்றும் மேம்பட்ட பொருளாதார ஸ்திரத்தன்மையை வழங்கும்.

மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் நீண்ட காலமாக பல வித அறிவிப்புகளுக்காக காத்திருக்கிறார்கள். அவற்றில் அகவிலைப்படி உயர்வு, 18 மாத டிஏ அரியர் தொகை, 8வது ஊதியக்குழுவின் உருவாக்கம் ஆகியவை முக்கியமானவையாக உள்ளன.   

புத்தாண்டு தொடங்கியுள்ள நிலையில் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இரண்டு நல்ல செய்திகள் விரைவில் கிடைக்கக்கூடும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் ஒன்று பட்ஜெட் அறிவிப்புகளின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. இதைப் பற்றி விரிவாக இந்த பதிவில் காணலாம்.  

7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் படி ஜனவரி 2025 -க்கான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றி அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பெரிய நிவாரணத்தை அளிக்கும். 

இதுவரை அக்டோபர் வரையிலான ஏஐசிபிஐ எண்கள் வந்துள்ளன. நவம்பர் மற்றும் டிசம்பர் எண்கள் வந்தவுடன் தான் ஜனவரி அகவிலைப்படி உயர்வு பற்றிய இறுதி முடிவு எடுக்கப்படும். எனினும் சமீபத்திய போக்குகளை பார்க்கும் பொழுது டிஏ 3% அல்லது 4% அதிகரிக்கலாம் என்று கூறப்படுகின்றது.  

தற்போது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 53% டிஏ மற்றும் டிஆர் -ஐ பெற்று வருகின்றனர். டிஏ மூன்று சதவிகிதம் அதிகரிக்கப்பட்டால் மொத்த அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 56% ஆக உயரும். இதனால் ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் பெரிய அளவில் ஏற்றம் காணும்.

சம்பம உயர்வு: ஜனவரியில் டிஏ 3% அதிகரித்து 56% ஆனால், மாத அகவிலைபப்டி = ரூ.18,000 x 56% = ரூ.10,080. தற்போதைய அகவிலைபப்டி =  ரூ.18,000 x 53% = ரூ.9,540. வித்தியாசம்: ஒவ்வொரு மாதமும் ரூ.540, ஆண்டுக்கு ரூ.6,480. அதிகபட்ச சம்பளம் ரூ.2,50,000 உள்ள ஊழியர்களுக்கு டிஏ 3% உயர்ந்தால், டிஏ அதிகரிப்பு ரூ.7,500 ஆக இருக்கும். இந்த உயர்வு தொழிலாளர்களுக்கு நிதி உதவி மற்றும் மேம்பட்ட பொருளாதார ஸ்திரத்தன்மையை வழங்கும்.  

மத்திய அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு தற்போதைய குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000. அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.1,25,000. அகவிலை நிவாரணம் 3% உயர்ந்தால், இவை முறையே மாதம் ரூ.270 மற்றும் ரூ.3,750 அதிகரிக்கும்.

18 மாத டிஏ அரியர் தொகை குறித்த அறிவிப்பு ஊழியர்களுக்கான இரண்டாவது நல்ல செய்தியாக வரலாம் என்று கூறப்படுகின்றது. கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட 18 மாதத்திற்கான டி அரியர் தொகை பற்றி விரைவில் ஒரு அப்டேட் வரக்கூடும்.  

பிப்ரவரி ஒன்றாம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வார். இதில் 18 மாத டிஏ அரியர் தொகை பற்றி அறிவிப்பு வெளியிடப்படும் என்று உறுதியாக நம்பப்படுகின்றது.   

அகவிலைப்படி அரியர் தொகை அளிக்கப்பட்டால் அது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையும். இதற்கான கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.  


No comments