Breaking News

பொங்கல் விடுமுறையில் 6 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள்.! வெளியான ஷாக் அறிவிப்பு :

 


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு விடுமுறை அறிவித்த நிலையில், மத்திய அரசின் யுஜிசி-நெட் தேர்வு மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளித் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், மாணவர்களின் உளவியல் பாதிப்பை கருத்தில் கொண்டு தேர்வு தேதிகளை மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருகிறார்கள். அந்த வகையில் முதல் நாள் போகி பொங்கல், பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என ஜனவரி 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை தொடர் கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளது. இதனையொட்டி தமிழக அரசு சார்பாக பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

இந்தநிலையில் பொங்கல் பண்டிகை தினத்தில் மத்திய அரசு தேர்வான  யுஜிசி-நெட் தேர்வானது  ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடத்தப்படவுள்ளது. இதனையடுத்து  அனைத்து பாடங்களும் அட்மிட் கார்டு வெளியாகியுள்ளது. 

பொங்கல் நாளில் அரசு தேர்வுகள்

இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக மாணவர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில்  கேந்திரிய வித்யாலாயா பள்ளிகளுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேஷன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பொங்கல் விழா நாட்களில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  இது மாணவர்களுக்கு திருவிழா கால விடுமுறையை கொண்டாட முடியாத உளவியல் தாக்குதலையும், தமிழ் பண்பாட்டின் மீதான ஒவ்வாமையையும் ஒருசேர வெளிப்படுத்தும் செயல்.

கேந்திரிய வித்யாலயா தேர்வுகள்

எனவே இந்த தேர்வுகள் அனைத்தையும் மறு தேதிக்கு மாற்றுக என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் பொங்கல் விடுமுறையில் கேந்திரிய வித்யாலயாவில் நடைபெறவுள்ள தேர்வுகளை வேறு தேதிகளுக்கு மாற்றுமாறு கடிதம் எழுதியுள்ளதாக கூறியுள்ளார். அதில் சென்னை, மதுரை, திருச்சி பள்ளிகளில் பொங்கல் விடுமுறை நாட்களில் ஜனவரி 13, 16, 17, 18 தேதிகளில் 6 ஆம் முதல் 11 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  

வேறு தேதியில் தேர்வுகளை நடத்திடுக

பொங்கல் அறுவடைத் திருநாள் மட்டுமல்ல, தமிழ் மக்களின் பண்பாட்டுடன் இணைந்தது. தமிழ்நாடு அரசு ஜனவரி 14 முதல் 18 வரை விடுமுறை அறிவித்துள்ளது.  கேந்திரிய வித்யாலயா குழந்தைகள் மட்டும் பொங்கல் விடுமுறையின் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியாமல் போய் விடக் கூடாது. இது மாணவர்களை உளவியல் ரீதியாக பாதிக்க கூடும்.  ஆகவே தேர்வுத் தேதிகளை மாற்றி பொங்கல் விடுமுறைக்கு பின்னர் நடத்துமாறு வலியுறுத்தி கேந்திரிய வித்யாலயா மண்டல துணை ஆணையாளர் திரு டி மணிவண்ணன் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

No comments