Breaking News

Rs. 20,000 Vs Rs. 20,000 Only/-.. செக்-கில் தொகையை குறிப்பிடும்போது "Only" போடுவது ஏன்?

 


இன்றெல்லாம் ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிகரித்துவிட்டன. எந்த ஒரு பொருள் வாங்க வேண்டுமானாலும் மக்கள் டிஜிட்டல் பேமெண்ட் தளங்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். ஆனால் அதற்காக செக்-கின் முக்கியத்துவம் குறைந்துவிடவில்லை. இன்னும் சில பரிவர்த்தனைகளுக்கு செக் லீஃப்-களையே சிலர் நம்பியுள்ளனர். செக் மூலம் பணம் செலுத்தும்போது பெறுநரின் பெயர், வங்கி விவரங்கள் மற்றும் எவ்வளவு தொகை கொடுக்கப்படுகிறது போன்ற விவரங்களை எழுதி.. செக் வழங்குபவர் அதில் கையொப்பமிட்டு வழங்க வேண்டும்.

அப்படி நிரப்பும் செக்கில் தொகையை நிரப்பிய பிறகு "ஒன்லி (Only)" என்று எழுதப்பட்டு ஒரு சாய்வான கோடைப் (/-) போட்டு சிலர் வழங்குவர். இதை பலரும் கவனித்திருப்பீர்கள். ஆனால் இது போன்ற கோடு ஏன் போடப்படுகிறது தெரியுமா?

ஒன்லி என்ற வார்த்தை கட்டாயமா?: செக் வழங்கும்போது தொகையை எழுதிய பிறகு ஒன்லி என்று எழுதவில்லை என்றால், அது ஒன்றும் பெரிய தவறில்லை. சிலர் "ஒன்லி" என்று எழுதாமல் இருந்தால் அந்த செக் ஏற்றுக்கொள்ளப்படுமா? என்றும் யோசிக்கின்றனர். நீங்கள் ஒன்லி போடவில்லை என்றாலும் செக் செல்லுபடியாகும். இதற்கான தனி விதி எதுவும் இல்லை. இந்த ஒன்லி என்ற வார்த்தை ஒரு பாதுகாப்பிற்காக மட்டுமே எழுதப்படுகிறது.

இந்த வார்த்தையை எழுதிவிட்டு ஒரு சாய்வான கோட்டை வரைந்தால் தொகைக்குப் பிறகு எந்த வித நம்பரையும் சேர்ப்பதற்கு இடம் இருக்காது. இது ஓரளவுக்கு மோசடியை தடுக்கும். உதாரணமாக ஒரு நபரின் பெயரில் ரூ.20,000-த்திற்கான செக்கை வழங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் தொகையை நிரப்பிய பிறகு எதுவுமே எழுதாமல் இருந்தால் ரூ.20,000-த்திற்க்கு பிறகு ஏதாவது நம்பரை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் நீங்கள் ரூ.20,000 மட்டும்/- அல்லது ஆங்கிலத்தில் ரூ.20,000 ஒன்லி/- என்று எழுதி கொடுத்தால்.. நீங்கள் சேர்த்த தொகைக்குப் பிறகு எந்த நம்பரையும் எழுத இடம் இருக்காது.

செக்கின் மூலையில் ஏன் 2 கோடுகள் வரையப்பட்டுள்ளன?: செக்கின் இடது மூலையில் வரையப்படும் இரண்டு சமமான கோடுகளுக்கும் அர்த்தம் உள்ளது. இந்தக் கோடுகள் கணக்கு பெறுபவருக்கு மட்டுமே அந்த செக் உரிமையாது என்பதை குறிக்கின்றன. வேறு எந்த நபரும் செக்கை பணமாக்க முடியாது. யாருடைய பெயரில் செக் வழங்கப்பட்டுள்ளதோ அந்த நபரின் கணக்கிற்கு மட்டுமே பணம் மாற்றப்படும்.

 

No comments