Breaking News

2025ல் மருத்துவமனைக்கு செலவு செய்யாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டுமா?? அப்போ இதை கட்டாயம் படியுங்கள்..

 


கடந்த 2024ம் ஆண்டு பலர் பல விதமான பிரச்சனைகளை சந்தித்து இருப்போம். குறிப்பாக, சரியான உணவு மற்றும் வாழ்க்கை முறை இல்லாததால் பல உடல் நல பிரச்சனைகளை சந்தித்து, தேவை இல்லாத மருத்துவ செலவுகள் செய்திருப்போம். ஆனால் இந்த புத்தாண்டில் இருந்து உங்கள் வாழ்வில் நீங்கள் செய்யும் சின்ன சின்ன மாற்றங்கள் இனி வரும் காலங்களில் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். ஆண்டு முழுவதும் நாம் கடினமாக உழைத்து எதை சேர்கிறோமோ இல்லையோ ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும். இல்லையென்றால், தற்போது இருக்கும் வசதிகளை கூட நம்மால் அனுபவிக்க முடியாமல் போய்விடும்.

அந்த வகையில், நோய் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ நடைபயிற்சி மிக அவசியம். ஆம், இந்த ஆண்டு முதல் அருகில் உள்ள கடைகளுக்கு, முடிந்த அளவு நடந்து செல்லுங்கள். அறிவியலின் படி, நாம் ஆரோக்கியமாக இருக்க குறைந்தது ஒரு நாளைக்கு 4000 ஸ்டெப்ஸ் ஆவது நாம் நடந்திருக்க வேண்டும். இந்த சின்ன மாற்றம் நமது உடலில் பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும். குறிப்பாக 80 ஆண்டு காலங்கள் வரை நோய் நொடி இல்லாமல் சிறப்பாக வாழ நாம் நடக்க வேண்டும் என்று மூத்த மருத்துவ நிபுணர்களும், உடற்பயிற்சியாளர்களும், ஆயுர்வேத மருத்துவர்களும் பரிந்துரைத்து வருகிறார்கள். ஒரு நாளைக்கு 10,000 படிகள் நடப்பது பல நோய்களின் அபாயத்தைக் குறைத்து மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். முடிந்தால் காலை வெயிலில் நடைபயிற்சி செய்யுங்கள்.

ஒரு மனிதன் உடல் நலத்துடன் வாழ முக்கியமான ஒன்று மன ஆரோக்கியம். நடைபயிற்சி மேற்கொள்வதால் மன ஆரோக்கியம் மேம்படும். அதே சமையம், இந்த வருடம் முதல் செல்போன் பயன் பாட்டை முடிந்த வரை குறைத்து விடுங்கள். அதிகம் செல்போன் பயன்படுத்துவதால், Brain Rot அதாவது மூளை மந்த நிலையை அடைவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றது. இதனால் நம்மால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாது. வாழ்கையை பொறுத்தவரை நாம் தெளிவான முடிவு எடுத்தாலே நாம் முன்னேறி விடலாம். மேலும், செல்போன் பயன்படுத்தாமல் உங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதால் உங்கள் மொத்த குடும்பமும் சந்தோஷமாக இருக்கும். உங்களுக்கும் மன நிம்மதி கிடைக்கும்.

மேலும், உடலில் ஏற்படும் சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு மாத்திரைகளை சாப்பிடாமல் வீட்டு வைத்தியத்தை பின் பற்றுங்கள். ஏனென்றால், மாத்திரைகளால் உடலில் பல பிரச்சனை வருவதாக ஆராய்ச்சிகள் வெளியாகிறது. நீங்கள் உபயோகிக்கும் பிளாஸ்டிக் டப்பாக்களையும், பாட்டில்களையும் தூக்கி எரிந்து விட்டு, முடிந்த வரை ஸ்டீல் பாத்திரங்களை பயன்படுத்துங்கள். அனைத்து நாட்களிலும் வெள்ளை அரிசியை மட்டும் சாப்பிடாமல், ஒவ்வொரு நாள் ஒவ்வொரு சிறு தானியங்களை செய்து சாப்பிடுங்கள். உதரணமாக, ஒரு நாள் சாமை அரிசி என்றால், மறு நாள் சிகப்பு அரிசி, அடுத்து, திணை அரிசி என்று சமைத்து சாப்பிடுங்கள்.. முடிந்த வரை, கடை உணவுகளை தவிர்த்து விடுங்கள்.

நீங்கள் செய்யும் இந்த சின்ன மாற்றங்கள் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இந்த ஆண்டு முதல் நீங்கள் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள்..

No comments