Breaking News

பள்ளியில் சேராத மாணவர்கள் விபரம் 27-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்…! அரசு‌ அதிரடி உத்தரவு :

 


வேறு பள்ளிகளில் சேராத மாணவர் விபரம், தொடர்பு எண் உள்ளிட்டவற்றை சேகரித்து, அந்தந்த வட்டார அலுவலகத்தில் வரும், 27-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கல்வி பயின்று வரும் மாணவர்கள் அந்தக் கல்வி நிறுவனத்திலிருந்து பிற கல்வி நிறுவனத்திற்கு மாற்றம் செய்ய வேண்டிய நிலையில் அல்லது அந்தக் கல்வி முடித்து விட்ட நிலையில் கல்வி நிறுவனங்களால் அளிக்கப்படும் சான்றிதழ் மாற்றுச் சான்றிதழ் என அழைக்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர் விபரங்கள், யுடைஸ் எனும், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதில் ஆண்டுதோறும் பள்ளிகளில் புதிதாக சேரும் மாணவர், பள்ளியை விட்டு மாற்றுச்சான்றிதழ் பெற்றுச்செல்லும் மாணவர் விபரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. பள்ளிகளில் இருந்து மாற்றுச்சான்றிதழ் பெறும் மாணவர், ட்ராப் பாக்ஸ் எனும் பட்டியலில் வைக்கப்படுகின்றனர். இவர்கள் வேறு பள்ளியில் புதிதாக சேரும்போது, அந்த பட்டியலில் இருந்து நீக்கப்படுகின்றனர்.

நடப்பு கல்வியாண்டில் இறுதி செய்யப்பட்ட, ட்ராப் பாக்ஸ் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதை அடிப்படையாக வைத்து, பள்ளியில் சேர்த்தல் பதிவு விடுபட்டிருந்தால், அவற்றை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் ஒன்று முதல், 8-ம் வகுப்பு வரை, மாற்றுச்சான்றிதழ் பெற்று, இதுவரை வேறு பள்ளிகளில் சேராத மாணவர் விபரம், தொடர்பு எண் உள்ளிட்டவற்றை சேகரித்து, அந்தந்த வட்டார அலுவலகத்தில் வரும், 27-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments