MGR Noon meal Recruitmet 8,997 Vacancies : சத்துணவு திட்டத்தில் 8,997 காலியிடங்கள்.... விண்ணப்பம் செய்வது எப்படி?
சத்துணவுத்
திட்டத் துறையில் காலியாக உள்ள 8,997 காலிப்பணியிடங்களைத்
தொகுப்பூதியத்தில் நிரப்புவதற்கான அறிவிப்பைத் தமிழ்நாடு அரசு
வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின்கீழ், 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மதிய வேளையில் கலவை சாதத்துடன், மசாலா முட்டையும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் துவக்கப்பட்ட இத்திட்டம் அனைத்து மாநிலங்களாலும் பின்பற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 43,131 சத்துணவு மையங்களில், ஒரு சத்துணவு மையத்திற்கு ஒரு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் என 3 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு, சத்துணவுப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த சத்துணவுத் திட்டத்தினை சீரிய முறையில் செயல்படுத்திட, தற்போது காலியாகவுள்ள மொத்த பணியிடங்களில், அவசர அவசியம் கருதி, 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்களை மட்டும் மாதம் ரூ.3000/- வீதம் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
No comments