அரையாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுகிறதா..? வலுக்கும் கோரிக்கை..!! தமிழ்நாடு அரசின் முடிவு என்ன..?
அரையாண்டு விடுமுறை முடிந்து நாளை (ஜனவரி 2) அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்பட உள்ள நிலையில், ஜனவரி 6ஆம் தேதி வரை விடுமுறையை நீட்டிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் டிசம்பர் 23ஆம் தேதியுடன் அரையாண்டுத் தேர்வுகள் முடிவடைந்தன. இதையடுத்து, டிசம்பர் 24ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. இதனால், பல மாணவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிலையில், 9 நாட்கள் விடுமுறை முடிந்து, நாளை (ஜனவரி 2) அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. நாளைய தினம் பள்ளிகள் திறக்கப்படும் பட்சத்தில், இரண்டு நாட்களுக்கு மட்டுமே பள்ளிகள் இயங்கும். பிறகு சனி, ஞாயிறு வார விடுமுறை வந்துவிடும். எனவே, சொந்த ஊர் சென்றுள்ள மாணவர்களை கருத்தில் கொண்டு ஜனவரி 6ஆம் தேதி வரை விடுமுறையை நீட்டிக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கை தமிழ்நாடு அரசு பரிசீலிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
No comments