8வது சம்பள கமிஷன் மூலம் சம்பளம் எவ்வளவு உயரும்..? அதிர்ச்சி அளிக்கும் தகவல்..!!
மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்கும் முக்கியமான நடவடிக்கையாக, மத்திய அரசு 8வது சம்பள கமிஷன் அமைக்கப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று இந்த முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இந்த நிலையில் தற்போது மக்கள் மத்தியில் இருக்கும் ஒரே கேள்வி என்னவென்றால், இந்த 8வது சம்பள கமிஷன் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும் என்பதுதான். மத்திய அரசு பல தரப்பட்ட கணக்கீடுகளை செய்து இந்த சம்பள உயர்வை அறிவித்தாலும், fitment factor தான் மொத்த சம்பள உயர்வை நிர்ணயம் செய்யப்படும். இதை அடிப்படையாக வைத்து 8வது சம்பள கமிஷன் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பள எந்த அளவுக்கு உயரும் என்பதை தோராயமாக கணக்கிட முடியும்.
ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 8வது சம்பள கமிஷன் அமைப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 2016 ஆம் ஆண்டு அமலுக்கு வந்த 7வது சம்பள கமிஷன், அடிப்படை ஊதியத்தை ரூ.7,000-லிருந்து ரூ.18,000 ஆக 2.57 மடங்கு உயர்த்தியது.
இந்த முறை உத்திரவாதம் காரணி என கூறப்படும் fitment factor 2.5 முதல் 2.8 மடங்கு வரை இருக்கும் என கூறப்படும் வேளையில் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் மாதம் ரூ.40,000 முதல் ரூ.45,000 வரை ஊதியம் கிடைக்கும் எனவும் டிம்லீஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் கிருஷ்ணெடு சட்டர்ஜி ஈடி பத்திரிக்கையிடம் தெரிவித்துள்ளார். இதோடு மத்திய அரசு நீண்ட காலமாக திட்டமிட்டு வரும் செயல்திறன் அடிப்படையிலான ஊதிய உயர்வும் நடைமுறைக்கு வர வாய்ப்புகள்ளது.
8வது சம்பள கமிஷன்வின் மூலம் அடிப்படை ஊதியம் குறிப்பிடத்தக்க அளவு உயரும் என ஈடி பத்திரிக்கையிடம் கிங் ஸ்டப் & கசிவா, வழக்கறிஞர்கள் மற்றும் வக்கீல்கள் நிறுவனத்தின் பார்ட்னரான ரோஹிதாஸ்வ் சின்ஹா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2.86 என்ற fitment factor அடிப்படையாகக் கொண்டு கணக்கிடும் போது, அடிப்படை ஊதியம் மாதம் ரூ.51,480 வரை உயரக்கூடும் என ரோஹிதாஸ்வ் சின்ஹா கணக்கிட்டு உள்ளார். இந்த உயர்வு, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய நிதி (ஈ.பி.எஃப்), கிராஜுவிட்டி போன்ற பிற ஓய்வூதியச் சலுகைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
இதேபோல் எஸ்.கே.வி லா ஆபிஸின் மூத்த வழக்கறிஞர் நிஹால் பர்த்வான் ஈடி பத்திரிக்கையிடம் பேசுகையில், கடந்த கால போக்குகளின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 25-30% சராசரி ஊதிய உயர்வு கிடைக்கும் என கணித்துள்ளார்.
அதாவது 2006 ஆம் ஆண்டு அமலுக்கு வந்த 6வது சம்பள கமிஷன் 1.86 என்ற fitment factor உடன் 40% ஊதிய உயர்வை வழங்கியது. அதேபோல், 2.57 என்ற fitment factor உடன் அமலுக்கு வந்த 7வது சம்பள கமிஷன் 23-25% ஊதிய உயர்வை மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கியது.
இந்த நிலையில் ஊழியர் சங்கங்கள் தற்போது 3.0 முதல் 3.5 வரையிலான fitment factor கோரி வருகின்றன, இதன் மூலம் அடிப்படை சம்பளம் மாதம் தற்போதை 18000 ரூபாய் அளவு ரூ.25,000 முதல் ரூ.26,000 வரை உயர்த்தக்கூடும். ஊதிய உயர்வுக்கு கூடுதலாக, அகவிலைப்படி (DA) மற்றும் வீட்டு வாடகைப்படி (HRA) போன்ற உதவித்தொகைகளையும் 8வது சம்பள கமிஷன் மூலம் உயரும்.
No comments