TNEA 2025: இன்ஜினியரிங் சேர விருப்பமா? டாப் 10 தனியார் கல்லூரிகள் இவைதான்!
தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக இருந்து வருகிறது. இந்த ஆண்டும் இன்ஜினியரிங் படிக்க ஆர்வம் அதிகமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், டாப் 10 தனியார் பொறியியல் கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் உள்ள டாப் 10 தனியார் பொறியியல் கல்லூரிகள் எவை என்பதை கல்வி ஆலோசகர் தினேஷ் பிரபு தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
அதன்படி, மேனேஜ்மெண்ட் கோட்டாவில் சேர விரும்புபவர்கள், சிறந்த தனியார் பொறியியல் கல்லூரிகளை தெரிந்துக் கொள்வது அவசியம். மேலும் கவுன்சலிங் மூலம் சேருபவர்களும் தலை சிறந்த கல்லூரிகளை தெரிந்துக் கொண்டு சேர்வது சிறந்தது. கடந்த ஆண்டில் முதல் சுற்றில் இடங்கள் நிரம்பியதன் அடிப்படையில் கல்லூரிகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
1). எஸ்.எஸ்.என் எனப்படும் ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், செங்கல்பட்டு
2). சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சென்னை
3). பி.எஸ்.ஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு ரிசர்ச், கோவை
4). ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கோவை
5). குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோவை
6). ஸ்ரீகிருஷ்ணா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை
7). ராஜலெட்சுமி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சென்னை
8). ராஜலெட்சுமி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
9) லயோலா ஐகேம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, சென்னை
10). சவீதா இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
No comments