சூரிய சந்திர கிரகணம் 2023 : இந்த 3 ராசிகளுக்கு செல்வ வளம் பெருகும்..!
சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் அசுபமாக கருதப்படுகிறது. எனவே, கிரகண நேரத்தில் நாம் எந்த நல்ல வேலைகளையும் செய்வதில்லை.
2023 ஆம் ஆண்டு 4 சூரிய கிரகம் நிகழ உள்ளது. ஏற்கனவே இரண்டு கிரகணங்கள் முடிவடைந்த நிலையில், இந்த ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் அக்டோபரில் வரவுள்ளது. சூரிய மற்றும் சந்திர கிரகணம் ஜோதிடத்தில் சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது . இந்த ஆண்டு மொத்தம் 4 கிரகணங்கள் நடைபெறவிருந்தன .
இதில் இந்த ஆண்டின் கடைசி சூரிய மற்றும் சந்திர கிரகணம் அடுத்த மாதம் அக்டோபர் மாதம் நிகழ உள்ளது. அறிஞர்களின் கூற்றுப்படி, ஒரே மாதத்தில் இரண்டு கிரகணங்கள் 12 ராசிகளையும் பாதிக்கும். ஆனால் ஒரே நேரத்தில் கிரகணங்கள் வருவது 3 ராசிக்கு சாதகமான விளைவை ஏற்படுத்தும். இரண்டு கிரகணங்களால் மூன்று ராசிக்காரர்களின் வீட்டில் செல்வ வளம் பெருகும், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.ஜோதிட சாஸ்திரப்படி, இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் அக்டோபர் 14ஆம் தேதியும், ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் அக்டோபர் 29ஆம் தேதியும் நிகழப் போகிறது. இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இந்தியாவிலும் தென்படும். இப்படி ஒரே மாதத்தில் 2 கிரகணங்கள் ஏற்படுவது இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் நல்ல காலம் வரப்போகிறது என்று அர்த்தம்.துலாம்: இந்த ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் மகிழ்ச்சியைத் தரும். நிலுவையில் உள்ள அனைத்து வேலைகளும் முடிவடையும் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள்.
நீங்கள் வேலையில் பெரிய பொறுப்புகளை பெறலாம். குடும்பத்துடன் நல்ல நேரம் செலவிடப்படும். இந்த நேரத்தில் வெளியூர் பயணங்களை திட்டமிடலாம். பணம் தொடர்பான நல்ல செய்திகளைப் பெறலாம்.சிம்மம்: கிரகணத்தின் தாக்கத்தில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்களுக்கு சில நல்ல செய்திகள் வரும். பணியாளர்கள் முன்னேற்றம் அடைய வாய்ப்பு உள்ளது. பெரிய பதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. நிதி நிலை நன்றாக இருக்கும். வீட்டில் ஒரு புதிய கார் அல்லது புதிய குடும்ப சொத்து வளர்ச்சி இருக்கலாம். தொழிலதிபர்கள் தொழிலில் லாபம் அடைவார்கள்.
பெற்றோருக்கு நல்ல ஆரோக்கியம் இருக்கும்.மிதுனம்: பண்டிதர்களின் கூற்றுப்படி, இந்த சூரிய கிரகணம் இந்த ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயத்தைத் தரும். பணியிடத்தில் முன்னேற்றம் மற்றும் சமூகத்தில் மரியாதை இருக்கும். சகோதர சகோதரிகளுடன் நல்லுறவு இருக்கும். உடன்பிறந்தவர்களுடன் சேர்ந்து புதிய தொழிலில் முதலீடு செய்யலாம். வீட்டில் ஒரு சுபநிகழ்ச்சி இருக்கலாம், அதில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்கலாம்.
No comments