Breaking News

Oppo மொபைல் பயன்படுத்துபவர்களுக்கு குட் நியூஸ்.. இலவசமாக பேட்டரி மாற்றிகொள்ளலாம்.. முழு விவரம்

 


மொபைல் யூஸர்கள் மத்தியில் பிரபலமான பிராண்டாக இருந்து வருகிறது ஒப்போ. எண்ணற்ற மொபைல் மாடல்கள் அறிமுகப்படுத்தி, மொபைல் உற்பத்தியாளர்களிடையே கடும் போட்டியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்திய சந்தையில் சீன நிறுவனங்களின் ஸ்மார்ட்ஃபோன்கள் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், ஒவ்வொரு மொபைல் நிறுவனங்களும் தங்கள் யூஸர்களுக்கு மலிவு விலையில் அதிக அம்சங்கள் கொண்ட மொபைல் மாடல்களை தருவதில் போட்டி போட்டு வருகின்றன.

உலக சந்தைகள் அனைத்திலும் இதே நிலை தான் காணப்படுகிறது. இதனிடையே சீன மொபைல் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் Oppo, தனது யூஸர்களுக்கு இலவசமாக பேட்டரி மாற்றி தரும் சேவையை விரைவில் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த புதிய சேவையின் மூலம் Oppo ஸ்மார்ட்ஃபோன் யூஸர்கள் 4 ஆண்டுகளுக்குள் தங்கள் மொபைல் போன்களின் பேட்டரிகளை தேவைப்பட்டால் இலவசமாக மாற்றி கொள்ளலாம். விரைவில் அறிமுகமாகவிருக்கும் Oppo A2 Pro 5G மொபைல் இந்த 4 ஆண்டு Free Battery Replacement திட்டத்தில் இணைக்கப்படும் முதல் மொபைல் மாடலாக இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Oppo எப்போது இலவசமாக பேட்டரியை மாற்றி கொடுக்கும்.?

அறிக்கைகளின்படி, Oppo நிறுவனம் தகுதியான ஸ்மார்ட்ஃபோன்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகளுக்கு இலவச பேட்டரி மாற்ற சேவையை வழங்கும். இலவசமாக பேட்டரி ரீபிளேஸ்மென்ட் செய்து கொடுக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டால், இந்த திட்டத்தின் கீழ் வெளியிடப்படும் Oppo மொபைல்களின் பேட்டரி ஹெல்த்-ஆனது வாங்கியதிலிருந்து 4 ஆண்டுகளுக்குள் 80 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால் மட்டுமே, விற்பனைக்குப் பிந்தைய சேவையின் (after sale service) கீழ் பேட்டரியை Oppo நிறுவனம் குறிப்பிட்ட மொபைல் யூஸர்களுக்கு மாற்றி கொடுக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. வரவிருக்கும் Oppo A2 Pro 5G மொபைலுடன் இந்த இலவச திட்டம் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

4 ஆண்டு பேட்டரி ரீபிளேஸ் பாலிசியின் கீழ் வெளியாக இருப்பதாக கூறப்படும் Oppo A2 Pro 5G மொபைல் பாரிய விவரங்களை பற்றி Oppo நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக எதையும் உறுதிப்படுத்தவில்லை. ஆனாலும் இந்த மொபைலின் சிறப்பம்சங்கள் பற்றிய தகவல்கள் கசிந்துள்ளன. அது சார்ந்து Oppo A2 Pro 5G மொபைலின் அம்சங்கள் பற்றி தற்போது பார்க்கலாம்.

இதுவரை வெளியாகி இருக்கும் அறிக்கைகளின் படி இந்த மொபைல் 8GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ், 12GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 12GB ரேம் + 512GB இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளிட்ட 3 வேரியன்ட்ஸ்களில் வரும். தவிர வாஸ்ட் பிளாக், டெஸெர்ட் பிரவுன் மற்றும் டஸ்க் கிளவுட் பர்பிள் உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் வெளியாகும் என கூறப்படுகிறது.

மேலும் இந்த மொபைலில் கர்வ்ட் எட்ஜஸ் மற்றும் FHD+ ரெசல்யூஷனுடன் 6.7-இன்ச் OLED டிஸ்ப்ளே இருக்கும். MediaTek Dimensity 7050 ப்ராசஸர் இதில் கொடுக்கப்படும். ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான ColorOS 13ல் இயங்கும் இந்த மொபைல் 5000mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. தவிர இந்த மொபைலின் பின்புறத்தில் 64 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ அல்லது டெப்த் சென்சார் கொடுக்கப்படும் என கூறப்படுகிறது. மொபைலின் முன்புறத்தில் 8 எம்பி செல்ஃபி கேமரா இருக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments