Breaking News

அரசு ஊழியர்கள் மற்றும் பென்ஷனர்களுக்கு ஹேப்பி நியூஸ்... கூடிய விரைவில் ஊதிய உயர்வு!

 

7th pay commission அடிப்படையில் கூடிய விரைவில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பென்ஷனர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசு டியர்னஸ் அலவன்ஸ் (Dearness Allowance - DA) ஐ அறிவிக்க உள்ளதால், மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடிய விரைவில் சம்பள உயர்வு வரும் என்பதை நாம் எதிர்பார்க்கலாம். ஜூலை 1, 2023 முதல் அமலாக்கப்படும் இந்த ஊதிய உயர்வில் 3% அதிகரிப்புடன், மொத்த DA 45 சதவீதமாக உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

ஊழியர்கள் மற்றும் பென்ஷனர்களுக்கு இந்த DA என்பது தொழிற்சாலை ஊழியர்களுக்கான மன்த்லி கன்ஸ்யூமர் பிரைஸ் இண்டெக்ஸ் (CPI-IW) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது என்று லேபர் பியூரியா குறிப்பிடுகிறது.

சமீபத்திய தகவலின் படி, ஜூலை 2023 -க்கான அனைத்து இந்திய CPI-IW, 3.3 புள்ளிகள் உயர்ந்து 139.7 அதிகரித்துள்ளது. இந்த ஒரு மாதத்தில் ஏற்பட்டுள்ள சதவீத மாற்றம் கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் 2.42% அதிகரிப்பை காட்டுகிறது. கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 0.90% அதிகரித்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் DA, மற்றும் பென்ஷனர்களுக்கு வழங்கப்படும் DR (Dearness Relief), ஒரு ஆண்டிற்கு இரண்டு முறை என ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் மாற்றத்திற்கு உள்ளாக்கப்படும். நிதி அமைச்சகத்தின் செலவினத்துறை DA உயர்வுக்கான ப்ரொபோசலை யூனியன் கேபினட்டின் அங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்கும். தற்போது ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பென்ஷனர்கள் 42% டியர்னஸ் அலவன்ஸ் பெற்று வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் 2023 4% உயர்வு மூலமாக 42% சதவீதத்திற்கு உயர்த்தப்பட்டது. தற்போதைய பணவீக்க விகிதத்தை கருத்தில் கொண்டு DA 4 சதவீதம் உயர்த்தப்படலாம் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர். மத்திய பிரதேசம், ஒடிசா, கர்நாடகா, ஜார்க்கண்ட் மற்றும் இமாச்சல பிரதேசம் போன்ற பல்வேறு மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு சமீபத்தில் டியர்னஸ் அலவன்ஸை உயர்த்தியது. 2006 ஆம் ஆண்டில் மத்திய அரசு தனது ஊழியர்கள் மற்றும் பென்ஷனர்களுக்கு DA மற்றும் DR கணக்கிடுவதற்கான ஃபார்முலாவை மாற்றி அமைத்தது.

DA கணக்கிடுவதற்கான ஃபார்முலா பின்வருமாறு

டியர்னஸ் அளவன்ஸ் சதவீதம் = (( கடந்த 12 ஆண்டு மாதங்களுக்கு அனைத்து இந்திய நுகர்வோர் குறியீட்டு எண்ணின் சராசரி (பேஸ் இயர் 2001=100) - 115.76) / 115.76) x 100.

மத்திய அரசு ஊழியர்களுக்கு பயன்படுத்தப்படும் ஃபார்முலா

டியர்னஸ் அளவன்ஸ் சதவீதம் = ((கடந்த 3 ஆண்டு மாதங்களுக்கு அனைத்து இந்திய நுகர்வோர் குறியீட்டு எண்ணின் சராசரி (பேஸ் இயர் 2001=100) - 126.33) / 126.33) x 100.

No comments