தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு, அக்டோபர் 2023 - செய்திக்குறிப்பு.
தமிழ்நாடு அரசின் பத்தாம் வகுப்பு நிலையிலான பாடத்திட்ட அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும் . அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும் . 2023-2024 - ம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் ( CBSE / ICSE / உட்பட ) பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் , 15 : 10.2023 ( ஞாயிற்றுக்கிழமை ) அன்று நடைபெறவுள்ள இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது . மாணவர்கள் விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 05.09.2023 முதல் 20.09.2023 வரை பதிவிறக்கம் செய்து , பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ .50 / - சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் / முதல்வரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் . 20.09.2023
No comments