Breaking News

மஞ்ச பூசணி பொரியல் பிடிக்குமா? அப்ப உங்களுக்கு இந்த நோய்கள் வர சான்ஸே இல்லை...


பண்டிகை நாட்களில் பெரும்பாலானோரின் வீடுகளில் மஞ்சள் பூசணியை சமைப்பதை நீங்கள் காணலாம்.

ஆனால் இதன் சுவை சற்று இனிப்பாக இருப்பதால், நிறைய பேர் மஞ்சள் பூசணியை சாப்பிடமாட்டார்கள்.

உங்கள் வீட்டிலும் இப்படி விழாக்காலங்களில் மஞ்சள் பூசணியை சமைப்பார்களா? ஆனால் நீங்கள் மஞ்சள் பூசணியை சாப்பிடமாட்டீர்களா? அப்படியானால் இனிமேல் மஞ்சள் பூசணியை சாப்பிடுங்கள். ஏனெனில் மஞ்சள் பூசணியில் உடலுக்கு நன்மை விளைவிக்கும் சத்துக்கள் ஏராளமாக உள்ளன.

அதுவும் மஞ்சள் பூசணியைக் கொண்டு சாம்பார் செய்வதை விட, பொரியல் செய்தால், அது இன்னும் சுவையாக இருப்பதோடு, அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் உடலுக்கு முழுமையாக கிடைக்கும். இப்போது மஞ்சள் பூசணி பொரியலை அடிக்கடி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.

1. நாள்பட்ட நோய்கள் தடுக்கப்படும்

உடலில் ப்ரீ ராடிக்கல்கள் அதிகமாக இருந்தால், அது உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை அதிகரித்து, இதய நோய், புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். ஆனால் மஞ்சள் பூசணியில் ஆல்பா கரோட்டீன், பீட்டா கரோட்டீன் மற்றும் பீட்டா க்ரிப்டோஜாந்தைன் போன்றவை உள்ளன. இவை ப்ரீ ராடிக்கல்களை நடுநிலைப்படுத்தி, அதனால் ஏற்படும் சேதத்தைத் தடுக்கிறது.

2. கண்களுக்கு மிகவும் நல்லது

மஞ்சள் பூசணியில் பீட்டா கரோட்டீன் மற்றும் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளன. ஒருவரது உடலில் வைட்டமின் ஏ குறைபாடு ஏற்பட்டால் தான், அது கண் பிரச்சனைகளை உண்டாக்கும். ஒருவர் போதுமான அளவு வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் நிறைந்த உணவுகளை உட்கொண்டு வந்தால், கண்புரை ஏற்படும் அபாயம் குறைவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே மஞ்சள் பூசணி பொரியலை அடிக்கடி உட்கொள்ளும் போது, கண் தொடர்பான பிரச்சனைகள் தடுக்கப்பட்டு, கண் பார்வை மேம்படும்.

3. நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

மஞ்சள் பூசணியில் இருக்கும் பீட்டா கரோட்டின் உடலில் பல மாயங்களை புரிகின்றன. முக்கியமாக இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவி புரிந்து, நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராடுகின்றன. முக்கியமாக இதில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது உடலில் இரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்க உதவி புரிகிறது மற்றும் காயங்களை விரைவில் ஆற்றுகிறது.

4. புற்றுநோயின் அபாயம் குறையும்

தற்போதைய மோசமான உணவுப் பழக்கத்தால் புற்றுநோயின் அபாயம் அதிகம் உள்ளது. இருப்பினும், குறிப்பிட்ட சில உணவுகளை உட்கொள்ளும் போது புற்றுநோயின் அபாயம் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதுவும் பீட்டா கரோட்டீன், ஆல்பா கரோட்டீன் அதிகம் உள்ள உணவுகளை உட்கொண்டால், வயிற்று புற்றுநோயின் அபாயம் கணிசமாக குறையும். எனவே புற்றுநோய் வரக்கூடாது என்று நினைத்தால், மஞ்சள் பூசணி பொரியலை சாப்பிடுங்கள்.

5. இரத்த சர்க்கரை கட்டுப்படும்

சர்க்கரை நோயாளிகள் பலருக்கும் இருக்கும் ஒரு சந்தேகம், மஞ்சள் பூசணியை சாப்பிடலாமா என்பது தான். உண்மையில் மஞ்சள் பூசணியில் கலோரிகள் மற்றும் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவு. எனவே இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற மிகச்சிறந்த காய்கறி. அதுவும் பூசணிக்காயை மட்டுமின்றி, அதன் விதைகளை உட்கொண்டால், அது இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதோடு, கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகிறது. ஏனெனில் பூசணியில் மக்னீசியம் அதிகமாக உள்ளது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை விளைவிக்கும்.

No comments