Breaking News

ரூ.92,00,00,000 பணம் வங்கி கணக்கில்.. அயர்லாந்திலும் கோடம்பாக்கம் கதை.. ஷாக்கில் உறைந்த 18 வயது இளைஞர்!

ம்மில் அனைவருக்கும் சினிமாவில் வருவதைப் போல் ஒரே பாடலில் கோடீஸ்வரராக மாறி வாழ்க்கையை நன்றாக அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கும்.
கண்டிப்பாக வாழ்வில் ஒரே ஒரு முறையாவது இப்படி ஏதேனும் அதிசயம் நடந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்திருப்போம். ஆனால் திடீரென்று ஒரு நாள் நீங்கள் கற்பனை செய்ததை போலவே உங்களது வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம் இருந்தால் அது எப்படி இருக்கும் என்று சிந்தித்ததுண்டா?

சமீபத்தில் சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த டிரைவர் ராஜ்குமார் என்பவரது வங்கிக் கணக்கில் 9000 கோடி ரூபாய் டெபாசிட் ஆன சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதேபோல சம்பவம் வட அயர்லாந்திலும் நடந்துள்ளது.

வட அயர்லாந்தை சேர்ந்த டேல் கில்லெஸ்பி என்ற 18 வயது இளைஞனுக்கு இப்படிப்பட்ட ஒரு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. அவர் கணக்கு வைத்துள்ள வங்கி செய்த தவறுதலாக அவரது கணக்கில் இந்திய மதிப்பில் சுமார் 92 கோடி பணம் போடப்பட்டுள்ளது. தன்னுடைய பாட்டி அளித்த 8900 யூரோக்கள் அதாவது இந்திய மதிப்பில் 9.18 லட்சம் மதிப்புடைய காசோலை மூலம் வங்கியிலிருந்து பணம் பெற முயற்சித்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

வங்கி செய்த தவறினால் தன்னுடைய வாழ்வில் மறக்க முடியாத அனுபவம் கிடைக்கும் என்று அவர் கண்டிப்பாக கற்பனை கூட செய்திருக்க மாட்டார். அவர் அளித்த 9.18 லட்சம் ரூபாய் மதிப்புடைய காசோலைக்கு பதிலாக வங்கியில் இருந்து 92 கோடி அவரது கணக்கிற்கு சேர்க்கப்பட்டுள்ளது.

தன்னுடைய கணக்கில் உள்ள பேலன்ஸை சோதனை செய்து பார்க்கும் போது தான் இவ்வளவு பெரிய தொகை தன்னுடைய வங்கி கணக்கில் இருப்பதே அவருக்கு தெரியவந்துள்ளது. இதனால் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளான டேல் மற்றும் அவரது குடும்பத்தினர் அதனை அப்படியே ஸ்கிரீன்ஷாட் எடுத்து தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் பகிர்ந்துள்ளனர்.

மேலும் இந்த பணத்தை வைத்து புதிதாக ஒரு ஆடம்பர சொகுசு கார் வாங்க வேண்டும் என்றும் தன்னுடைய மகனிடம் அவர் குறிப்பிட்டுள்ளார். பணத்தை செலவு செய்ய வேண்டும் என்று தன் மகனுக்கு அதிக ஆர்வம் இருந்ததாகவும் ஆனால் ஒரு வேலை அவன் அவ்வாறு பணத்தை செலவு செய்யும் பட்சத்தில் மீண்டும் அதனை திரும்ப செலுத்த வேண்டிய நிலை வரும் எனவும் எச்சரித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

எது எப்படி இருந்தாலும் அந்த இளைஞனின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. உடனடியாக தன்னுடைய தவறை உணர்ந்த கொண்ட வங்கி சரியான நடவடிக்கைகளின் மூலம் டேலின் வங்கி கணக்கில் சரியான அளவு பணத்தை செலுத்தி அனைத்தையும் சரி செய்துள்ளது. ஆனாலும் கூட வாழ்நாள் முழுவதும் கூறுவதற்கு தன்னுடைய மகனுக்கு ஒரு கதை கிடைத்து விட்டதாக அவரின் தாயார் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

No comments