Breaking News

செப்டம்பர்-2023 சிறார் திரைப்படம் ஹருண் அருண் -கதைச் சுருக்கம் :

 

கதைச்சுருக்கம்‌ - ஹருண்‌ அருண்‌ திரைப்படம் (Synopsis - Harun Arun movie)...

ஹருண்‌-அருண்‌ திரைப்படத்தை இயக்கியவர்‌ வினோத்‌ கணத்ரா. இது குஜராத்தி மொழியில்‌ எடுக்கப்பட்ட திரைப்படம்‌ ஆகும்‌. ஒரு மணி நேரம்‌ 13 நிமிடங்கள்‌ ஓடும்‌ இத்திரைப்படத்தை தயாரித்தது இந்திய குழந்தைகள்‌ திரைப்பட சங்கம்‌ (Children's Film Society, India) 'ஹருண்‌', பாகிஸ்தானில்‌ இஸ்லாமிய மத நம்பிக்கைகளை பின்பற்றும்‌ சிறுவன்‌. ஹருண்‌ தனது தாத்தாவுடன்‌ அவரது நண்பரை சந்திக்க குஜராத்தில்‌ உள்ள கட்ச்‌ பாலைவன எல்லை வழியாக இந்தியாவுக்குள்‌ நுழைகிறான்‌. அந்த பயணத்தில்‌ தனது தாத்தாவிடமிருந்து பிரிந்து, குழந்தைகள்‌ நிறைந்த ஒரு குடும்பத்தில்‌ தஞ்சமடைகிறான்‌, அவன்‌ பெயரை 'அருண்‌' என்று தவறாக புரிந்துகொள்கிறார்கள்‌.

ஹருண்‌ தனது அன்பாலும்‌ தைரியத்தாலும்‌ அக்குடும்பதையும்‌ கிராமத்தையும்‌ வெல்கிறான்‌. ஆனால்‌, அவன்‌ பாகிஸ்தானை சேர்ந்தவன்‌ என கண்டுபிடிக்கப்பட்டபோது, அவனது மதத்தின்‌ அடிப்படையில்‌ கிராமபெரியவர்களால்‌ சந்தேகிக்கப்படுகிறான்‌. இச்சூழல்‌ உருவாக்கிய சவால்கள்‌ மற்றும்‌ எல்லா பாகுபாடுகளையும்‌ கடந்து அவனது அன்பு வெல்ல முடியுமா? என்பதே இக்கதை.

நட்பும்‌, தாய்மையும்‌, குழந்தைகளின்‌ மனமும்‌ பாகுபாடுஅறியாதது; வேறுபாடு காணாதது எனும்‌ உண்மையை உணர்வு ரீதியாக பார்ப்பவர்களுக்குள்‌ ஏற்படுத்துகிறது.


No comments